எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஈரோடு, ஜன.28 தடுப் பணை கட்டுவதைக் கண்டித்து, கேரளாவுக்கே சென்று, நாளை போராட்டம் நடத்த, விவசாய சங்கத்தினர் முடிவு செய் துள்ளனர்.

பவானி ஆற்றின் குறுக்கே, தடுப்பணைகள் கட்ட, கேரள அரசு முயல்வதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர்கள் சங்கங்களின் கூட் டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி துணை நதியான, பவானி ஆற்றின் குறுக்கே, ஆறு இடங் களில் தடுப்பணை கட்ட திட் டமிட்டு, இரண்டு இடங்களில் கட்டுமானப் பணியை, கேரள அரசு துவங்கியுள்ளது. இதைத் தடுக்க, பிரதமருக்கு, தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுத வேண்டும். உச்சநீதிமன் றத்தில், தமிழக அரசு தடை யாணை பெற வேண்டும். கேர ளாவைக் கண்டித்து, கோவை ஆனைக்கட்டியில் இருந்து, கோவை, திருப்பூர் விவசாயிகள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, கேரளாவில் தடுப்பணை கட்டும் இடத்துக் குச் சென்று, நாளை போராட, முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில், தடுப்பணை கட்டும் தேக்குவட்டையில் போராட் டம் செய்கிறோம். பின், மஞ் சக்கண்டி, புத்தூர், அகழ பகுதி யில் ஆர்ப்பாட்டம் செய்கி றோம் என, வலியுறுத்தினர். பின்,தீர்மானமும் நிறை வேற்றினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner