எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

* மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்கான தேதி முதல் அமைச்சரைச் சந்தித்துப் பேசிய பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

* ஏறுதழுவுதல் போராட்டத்தின் போது வன்முறைக்கு இலக்கான சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களை   நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்.

* அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

* ஏறுதழுவுதல்  போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறைகள்பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்  என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

* பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பாக முதல் அமைச்சருக்கான வேட்பாளராக அமிர்ந்தர்சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

* உ.பி., பஞ்சாப் மாநிலங்களில் பிஜேபிக்கு எதிராக மே.வங்க முதல் அமைச்சர் மம்தா தீவிரப் பிரச்சாரத்தில் குதிக்கிறார்.

* கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்ட கோலாரில் மீண்டும் தங்கம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* அமெரிக்காவின் புளோரிடாவில் மலைப்பாம்புகளைப் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் (இருளர் எனக் கூறப்படுபவர்கள்) அழைக்கப்பட்டுள்ளனர்.

* வங்கிகளில் ஏடிஎம் கார்டு கேட்டு 13.3. லட்சம் பேர் மனு செய்துள்ளனராம்.

* மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுமாம்.

* தமிழ்நாட்டில் வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களில்தான் வறட்சி அதிகம் என்று மத்திய குழு தன் ஆய்வில் தெரிவித்துள்ளது.

* 2016ஆம் ஆண்டில் பிரிட்டன் 17,20,000 கார்களை உற்பத்தி செய்துள்ளது.

* கடலூர் மாவட்டத்தில் திடீர் மழை காரணமாக 5000 ஏக்கரில் நெற்பயிர் நீரில் மூழ்கியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner