எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி

வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்

பிஜேபியின் பித்தலாட்டமான தேர்தல் பிரச்சாரம்

புதுடில்லி, ஜன.29 வடமாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தல்களில் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக, அம்பேத்கர் வேதங்களை எதிர்க்கவில்லை என்றும், பார்ப்பனர்களை எதிர்க்க வில்லை என்றும் திரிபுவேலைகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். கடந்த கால வரலாறுகளை, ஆவணங் களை மாற்றி அமைத்திட முனைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கருத்துகளிலும், செயல்பாடுகளிலும் எதிர்ப்புகள் வந்த போதிலும்,  இளைய தலைமுறையினரிடையே வரலாற்றுப்பதிவுகளை மாற்றி அமைக்கின்ற திட்டத்துடன் இந்து தேசியவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எல்லா நிலைகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு உள்ளதா என்கிற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இந்துக்களாக உள்ள அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என வலியுறுத்தியதால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோருக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தது.

ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ணகோபால்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால்  லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் குறித்து தொடர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

அவர் பேசியபோது குறிப்பிட்டதாவது:

“அம்பேத்கர் தமது பணிகளுக்கிடையே எத்தனையோ இழிநிலைகளை சந்தித்த போதிலும், நாட்டுக்கு எதிராக அவர் எப்போதும் பேசியவரில்லை. பிறருக்கு தீங்கிழைக்கும் நோக்கமின்றி ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்றுஎண்ணினார்.அவர்பணிகளுக்கிடையேவன் கொடுமைகளையும், இழிவுபடுத்தலையும் சந்தித்தபோதி லும், அவர்  எதிலும் தவறாகவோ, எவர் ஒருவருக்கும் எதிராகவோசெயல்பட்டதில்லை.மற்றவர்கள்பாதிக்கப் படக்கூடாது என்று சிவன் கடவுள் விஷம் அருந்தியது போல், அம்பேத்கர் செயல்பட்டார்.

மகாத்மா காந்தி போன்றவர்களைப்போன்றே அம்பேத் கரும் அதே கொள்கைகளை உடையவராக இருந்தார்.

சில பிரச்சினைகளில் அவர்கள் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், நாட்டின் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். மதமற்ற சமூகம் குறித்து அவர் எண்ணிப்பார்த்தவரில்லை. அவருடைய கருத்தின்படி, மதம்தான் மய்யப்புள்ளி. ஆனால், சடங்கு களின்மீது அவருக்கு நம்பிக்கையில்லை. ஆன்மிகம் என்பதில், வேதங்களில் ஆதாரங்கள் உள்ளதாக அவர் நம்பினார். அம்பேத்கர் பார்ப்பனர்களை எப்போதுமே எதிர்த்தவரில்லை’’ என்று கிருஷ்ண கோபால் பேசினார்.

அம்பேத்கர் கருத்துகளில் ஆர்.எஸ்.எஸ்.  கொண்டிருந்த முரண்பாடுகளை மாற்றிக்கொண்டதுபோல் கூறத் தொடங்கியுள்ளது. தற்போது அம்பேத்கர்குறித்து ஆர்.எஸ்.எஸ். கூறும்போது, அம்பேத்கர் வேதங்களை எப்போதுமே எதிர்த்தவர் இல்லை என்றும், குறிப்பிட்ட ஜாதியையோ, மதத்தையோ அவர் முன்னிறுத்தியது கிடையாது என்றும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில்  ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ணகோபால் கூறும்போது, ‘...வேத மதத்தின்மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருந்தார். ஆனால், பின்னாளில் ஏற்பட்ட முரண்பாடுகளால் எதிர்த்தார்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிருஷ்ண கோபால், அம்பேத்கரை ‘தேசபக்தர்’ என்று குறிப்பிட்டுள்ளார். சிலர் கூறுவதுபோல், மதம் இல்லாத சமூகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று அம்பேத்கர் கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் அடையாளமாக விளங்கும் அம்பேத்கர் எந்த ஜாதியையும் எப்போதுமே முன்னிறுத்தியவர் இல்லை என்றும் கிருஷ்ண கோபால் கூறியுள்ளார்.

வேத சாத்திரங்களை அழிக்கவேண்டும் என்றவர் அம்பேத்கர் என்பதே உண்மை

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்ற கட்டுரையில் அம் பேத்கர் குறிப்பிட்டுள்ளதைக் காணும்போது அம்பேத்கர் குறித்த கிருஷ்ணகோபால் கருத்து ஆச்சரியத்தையே ஏற்படுத்தும்.

அம்பேத்கர் அக்கட்டுரையில், “பகுத்தறிவுக்குப் பொருந் தாத, அறநெறிகளுக்கு இடமில்லாத வேத சாத்திரங்களை அழித்து மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். மத ஸ்ருதிகள், மத ஸ்மிருதிகள் ஆகியவற்றைக் கட்டாயம் அழித்து ஒழித்திட வேண்டும். அவை எவ்வித பயனையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதுதான் என்னுடைய உறுதியான கருத்து’’ என்று குறிப்பிடுகிறார்.

எழுத்து வடிவம் இல்லாத செவிகளால் கேட்கப் படுகின்ற ஸ்ருதிகள் வேதங்கள் எனப்படுகின்றன. புத்த கங்கள் வடிவில் மகாபாரதம், இராமாயணம் போன்றவை ஸ்மிருதிகள் எனப்படுகின்றன.

‘எகனாமிக் டைம்ஸ்’ இதழில் குறிப்பிட்டுள்ளபடி,  அம்பேத்கர் எழுதியுள்ள நூல்களான இந்தியாவில் இந்துமதத்தில் புதிராக உள்ள ஜாதிகள்-(1916), ஜாதியை ஒழிக்கவேண்டும்-(1936), சூத்திரர்கள் யார்?-(1946), தீண்டத்தகாதவர்கள்-(1948)

[Riddles in Hinduism-Caste in India (1916), Annihilation of Caste (1936), Who were the Shudras (1946) and The Untouchables (1948)]

ஆகிய நூல்களில் ஜாதி, மதம் குறித்த அம்பேத்கரின் சாடல்கள் நிறைந்து உள்ளன.

வேதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண் டிருந்தவரான அம்பேத்கர் உண்மையில் புத்த நெறியைத் தழுவிக்கொண்டவர் ஆவார்.

அம்பேத்கர் கொண்டிருந்த ஆளுமைகள் அல்லது வாழ்க்கைகுறித்து ஆர்.எஸ்.எஸ். திரிபுவாதங்களுடன் விளக்க முற்படுவது  இது முதல்முறையல்ல. இது போன்று நீண்ட காலமாகவே அவரை ஆர்.எஸ்.எஸ்.சின் மய்யமான கொள்கைகளுக்கு நெருக்கமானவர் என்று உருவகப்படுத்திட பெருமுயற்சி எடுத்துவருகிறது.

2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஆங்கில இதழில்  ஒரு கட்டுரை வெளியானது. அண்மையில்கூடஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எம்.ஜி.வைத்யா, அம்பேத்கர் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அனைத்து வகைகளிலும் இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு

வராலாற்றுப் பேராசிரியரின் மறுப்பு

ஆர்.எஸ்.எஸ்.சின் கூற்றை மறுத்து   வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா கூறும்போது, 1949 -1951 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப் புகளை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார் என்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

வைத்யா எழுதும்போது, “இந்து சட்ட வரைவை எதிர்ப்பவர்கள் பலராக இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் அதற்குப் பொறுப்பு என்று எப்படி கூறலாம்? சங்கராச்சாரியார்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர்களா? இந்து மதத்தில் உள்ள அனைத்து சங்கராச்சாரியார்களையும், மகந்துகளையும், மடாதிபதிகளையும் ஒரே நிலைப்பாட்டின்கீழ் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமானது’’ என்றார்.

உண்மையில் 1964ஆம் ஆண்டில் அனைத்து சங்கராச் சாரியார்கள், மகந்துகள், மடாதிபதிகள் அனைவரையும் ஒரே நிலைப்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். கொண்டு வந்து, தீண்டாமையை இந்து மதம் அங்கீகரிக்கவில்லை என்று அறிவிக்கச் செய்ததாக வைத்யா கூறத்தொடங்கியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவகுப்பினர்குறித்துஆர்.எஸ்.எஸ். குறிப்பிடும்போது, அந்நியர்கள் ஆண்டபோது அவ்வகுப் பினரை உருவாக்கினார்கள் என்று கூறத் தொடங்கியுள்ளது. முசுலீம்களிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி வரை அந்நியர்கள் படையெடுத்தபோது தாழ்த்தப்பட்ட ஜாதியை உருவாக் கியதாக ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்சின் இக்கருத்தை அம்பேத்கர் மறுத்துக் கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் அழைக்கப்பட்டு, அவர் பேசுவதற்கு  மறுக்கப்பட்ட நிலையில் ‘ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்‘ என்கிற தலைப்பிலான கட்டுரையாக அப் பேச்சு வெளியானது. அக்கட்டுரையில் அம்பேத்கர் தெளிவாக ஆர்.எஸ்.எஸ். கருத்தை மறுத்துள்ளார்.

(தமிழில் அம்பேத்கர் கருத்தை ‘ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்து ஒரு நூலாக தந்தை பெரியார் வெளியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது)

ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிரான தாழ்த்தப்பட்டவர்களின்  மனக்கசப்புகள், ஆத்திரங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. அண்மைக்காலங்களில் ஆர்.எஸ்.எஸ். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பினரின் பல்வேறு செயல்கள், பல்வேறு சம்பவங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக உள்ளதை உணர்த்தியுள்ளன.

அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோகித் வெமுலா தற்கொலை மரணம், குஜராத் மாநிலத்தில் உனா பகுதியில் செத்த மாட்டின் தோலை உரித்ததாக, தாழ்த்தப்பட்டவர்கள் எழுவர்மீது நடந்த கொடுமையான தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள்,  சங் பரிவாரங்களின் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான செயல்களுக்கான உதாரணங்களாக உள்ளன.

அய்ந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒட்டி, தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளைப் பிரித்து, பாஜக அறுவடை செய்வதற் காகவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தன் கொள்கைகள் அம்பேத்கருடன் ஒத்துப்போவது போன்ற தோற்றப் பாட்டை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் அண்மைக்கால நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன என டிஎன்ஏ இதழின் அறிக்கை படம்பிடித்துக்காட்டியுள்ளது.

சமுதாயத்தில்தாழ்த்தப்பட்டவர்கள்என்கிறமுத்தி ரையை அகற்றிட, இந்து சமூகத்திலிருந்து தாழ்த்தப் பட்டவர்கள் என்கிற நிலை அகற்றப்படவேண்டும் என்று பாஜகவுக்கான வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். கூறத் தொடங்கியுள்ளதாக அவ்விதழின் அறிக்கை குறிப்பிடுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner