எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய கம்யூனிஸ்ட் கேள்விசென்னை, ஜன.29 ‘தோழர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றால், தந்தைப் பெரியாரோடு எங்கள் உற வைத் துண்டித்துக்கொள்ள முடியுமா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட் சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

ஜல்லிக்கட்டு போராட்டத் தில் சில சமூக விரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், மாணவர்களின் கூட்டத்திற்குள் நுழைந்து விட்டனர். இதற் கான ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள் ளன என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால்,எந்தெந்த இயக் கங்கள் சமூக விரோத இயக் கங்கள் என்பதையும், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவை அடையாளம் கண்டு வரையறுக்கப்பட்டன என்பது குறித்த விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

போராட்டம் அமைதியாக முடிந்துவிடக் கூடாது என் பதற்காக வன்முறையைத் தோற்றுவித்த காவல் துறை, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற் சிப்பதாகத் தெரிகிறது.

மேலும்,“தோழர்’ என அழைத்து யாரேனும் உங் களிடம் பேசினால் தொடர் பைத்துண்டியுங்கள்,என கோவைகாவல்துறை ஆணையர் கட்டளையிட்டுள் ளார்.

தந்தை பெரியார் தமது பொதுக் கூட்ட உரையைத் தோழர்களே, என்றுதான் தொடங்கினார். பெரியாரோடு எங்கள் உறவைத் துண்டித்துக் கொள்ள முடியுமா?

தமிழ்ப் பண்பாட்டு மூலங்களுக்குள் காவல் துறை மூக்கை நுழைப்பது அத்துமீறலாகும்.

தமிழக காவல் துறை அதிகாரிகளின் அறிக்கைகளும், பேட்டிகளும் கண்டனத்துக்கு உரியவை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner