எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது என்ன இரட்டை அளவுகோல்?

மருத்துவ மாணவர் சேர்க்கையில் “நீட்’ தகுதித் தேர்விலிருந்து ஜிப்மருக்கு விலக்காம்

புதுச்சேரி, ஜன.29 மருத்துவ மாண வர் சேர்க்கையில் ‘நீட்’ தகுதித் தேர்வில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜிப்மரில் சேர விரும்புவோர் தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண் டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக ‘நீட்’ தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட் டத்தைக் கொண்டு வந்தது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத் துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக ‘நீட்’ தேர்வை எழுத வேண்டும்.

ஏழு தனியார் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு...

புதுவையில் 1,200 மருத்துவ இடங்கள் உள்ளன. 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, 2 ஜிம்பர் மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.இதில் 7தனியார்,அரசுமருத்துவக் கல்லூரிக்கு ‘நீட்’ அடிப்படை யில் சேர்க்கை நடைபெறும்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி யில் சேர விரும்புவோர் தனி யாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சார்பில் புதுவை, காரைக்காலில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு தனி நுழைவுத் தேர்வு நடை பெறும்.

டில்லி எய்ம்ஸ், சண் டீகர்பிக்மர்,புதுவைஜிப் மர் மருத்துவக் கல்லூரிகள் தனி சட்டத்தால் உருவாக்கப் பட்டவை. இதனால், அவற் றுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர் முதல்வர் பி.சுவாமிநாதன்

இதுதொடர்பாக ஜிப்மர் முதல்வர் பி.சுவாமிநாதன் கூறி யதாவது:

ஜிப்மர் நுழைவுத் தேர்வுக் கான அறிவிப்பு விரைவில் இணையத்தில் வெளியாகும். இதற்கான கையேடு தயாராகி வருகிறது. மொத்தம் உள்ள 200 இடங்களில் 40 சதவீதம் புதுவை மாநிலத்துக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இதில், புது வையில் 40, காரைக்காலில் 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுவையில் தீர்மானம்

புதுவை மாணவர்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரியப் பாடப் பிரிவுகளைப் படிப்பதால் ‘நீட்’ தகுதித் தேர் வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இதனால்தான்,‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் வி.நாராய ணசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளார் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner