எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* 144 தடையாணையைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

* கோவா மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வேட்பாளர் வெறும் 17 பேர்தான் (மொத்த வேட்பாளர்கள் 251).

* கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ‘நானோபாட்’ எனும் குட்டி ரோபோவை (எந்திர மனிதன்), எலியின் உடலில் செலுத்தி நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது.

* வறட்சியால் விவசாயம் பாதிப்புக்கு ஆளானதால், 2.60 லட்சம் டன் உரம் தூக்கம்.

* கோவில் திருவிழாவில் பரத நாட்டியம் ஆடிய பிரபல பரத நாட்டியக் கலைஞர் ஓமனகுட்டனி ஆடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம். (கோவிலில் உள்ள அந்தக் கடவுள் ‘அருள்’ இதுதானோ!)

* ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிகளின்

நுழைவுத் தேர்வு விண்ணப்பத்துக்கு பிப்ரவரி 22 கடைசி நாள்.

* சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

* பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து காங்கிரஸ் சார்பில் நாளை சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் கருத்தரங்கம்.

* மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 34.59 அடி.

* சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்பட்டதால், மன வேதனையடைந்து காங்கிரசிலிருந்து விலகுவதாக கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

* புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமை அளிக்கும் எண்ணம் இப்பொழுது இல்லை என்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

* நானும், ராகுலும் சைக்கிளின்  இரு சக்கரங்கள் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner