எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து சட்டம் இயற்றும் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி, பாராட்டு!

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற

நமது முயற்சிகள் தொடரட்டும்! தொடரட்டும்!!

‘நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டமுன் வடிவு முன் மொழியப்பட்டதற்காக தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத் துத் தரப்பினருக்கும் பாராட்டையும்,  நன்றியையும் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற முயற்சிகள் தொடரட்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளார் - அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில்  இவ்வாண்டு மருத்துவக் கல்லூரிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப விருந்த கிராமப்புறப் பெற்றோர், மாணவர்கள் மிகுந்த கவலையுடன் இருந்தார்கள்.

ஒட்டுமொத்தமான கவலை

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அமைப் புகள், கல்வியா ளர்கள் எல்லோருக்கும் இந்த சமுதாயக் கவலை இருந்து வருகிறது.

இதற்காக நாம் (திராவிடர் கழகம்) பல மாதங்களாகவே போராடி வந்த நிலையில், தற்போது ஆளும் அ.இ.அ.தி.மு.க. கட்சியும், அரசும் இதனை ஆதரித்தும் அதேபோல, எதிர்க் கட்சியாக உள்ள தி.மு.க.வும் இதற்கு உறுதியான ஆதரவுக் குரலை ஆரம்பம் முதலே கொடுத்தும் வந்த நிலையில்,

சட்டமன்றத்தில் - சட்ட முன்வடிவு

இன்று (31.1.2017) சட்டப்பேரவையில், தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜயபாஸ்கர் இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவை யில்லை என்ற சட்டமுன்வடிவை முன் மொழிந்துள்ளார்.

முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு!

எதிர்க்கட்சித் தலைவர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் முழுமனதாக ஆதரித்துள்ளார்.

இது சட்டமாக்கப்படுவது உறுதி. இதற்காக மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அ.தி.மு.க. உள்பட அனைத் துக் கட்சித் தலைவர்களுக்கும், ஆசிரிய அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும்,  கல்வி யாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியும், பாராட்டும், மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்!

சமூகநீதிக் களத்தில் இது ஒரு சாதனை மைல்கல்.

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புக்கான

முயற்சிகள் தொடரட்டும்!

தமிழ்நாட்டின் இந்தத் தனித்தன்மை தொடரட்டும்! அடுத்து தேசிய புதிய கல்விக் கொள்கை நுழையாமல் பாதுகாக் கப்படவும் இதே முயற்சிகள் தொடரட்டும்! தொடரட்டும்!!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


31.1.2017  
சென்னை 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner