எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக கைதான 21 பேர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனைப் பிணையை அளித்தது.

* பிப்ரவரி 4 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் மேளா நடைபெறவுள்ளது.

* வரும் கல்வியாண்டு முதல் சுயநிதிக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்கிறது.

* ஜல்லிக்கட்டுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக அவசர சட்டம் கொண்டு வராதது ஏன்? என்ற வினாவை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.

* மகாராட்டிர மாநிலம், புனே நகரில் ராஜீவ் காந்தி இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ரசிலா ராஜூ (வயது 25) படுகொலை.

* பஞ்சாப் தேர்தலில் வாக்களிக்க, ரம், விஸ்கி போன்ற போதைப் பொருள்களை வாக்காளர்களுக்கு வழங்கிட ரகசிய கூப்பன் வழங்கப்படுகிறதாம். (பரவாயில்லையே, தமிழ்நாட்டைவிட முற்போக்காக(?) சிந்திக்கிறார்களே!)

* காந்தியார் நினைவு நாளான நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, சட்டப்பேரவை 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

* ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (30.1.2017).

* தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் சொன்னபொழுது  அவையில் சிரிப்பலையாம்!

* பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

* அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபொழுது கொண்டுவரப்பட்ட ‘கேர்’ திட்டம் ரத்தானால் மருத்துவக் காப்பீட்டை இழப்போர் எண்ணிக்கை 1.8 கோடி.

* நிதிநிலை அறிக்கைத் தொடரை சுமுகமாக நடத்திட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. (காலங்கடந்த ‘ஞானோதயம்!’)

* பினாமி பரிவர்த்தனைத் தடை சட்டத்தின்கீழ் இதுவரை 87 பேர்களுக்குத் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner