எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அம்மன் கோவிலில் அய்ம்பொன் சிலை திருட்டு

ஆலங்குளம், பிப்.1 ஆலங்குளம் அருகே உள்ள கீழ பட்ட முடையார்புரத்தில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைவாழ் கீழபட்டமுடையார்புரம் மக்கள் அய்ம்பொன் சிலையை நன்கொடையாக வழங்கினர்.

இரண்டரையடி உயரமும் 48 கிலோ எடையும் கொண்ட இந்த அய்ம்பொன் சிலை பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது. இந்த சிலையை கோவில் திருவிழாவின் போது சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாம். திருவிழா முடிந்ததும் சிலை கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்படுமாம்.

இந்நிலையில் நேற்று காலை பத்திரகாளியம்மன் கோவில் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சிலர் கோவிலுக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த கிரில் கேட்டின் பூட்டு திறந்து கிடந்தது. கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அய்ம்பொன் சிலை திருட்டு போனது தெரியவந்தது.

மேலும் அம்மனின் கழுத்தில் இருந்த டாலர், வெள்ளி கண்மலர் ஆகியவையும் காணாமல் போயிருந்தன. நள் ளிரவில் கோவிலுக்குள் புகுந்த யாரோ சிலர் அய்ம்பொன் சிலை, டாலர் மற்றும் கண்மலரை திருடிச் சென்றுள்ளனர். மேலும் கோவில் சிலையை திருடியவர்கள் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டின் சுவரில் ‘கோவிலில் உண்டியல் திருட்டு’ என எழுதி உள்ளனர்.

இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் கோவி லுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங் குளம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner