எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சென்னை மெரினாவில் 144 தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் கைது!

* வறட்சி நிவாரணத் தொகையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சரைச் சந்தித்தனர்.

* ஜல்லிக்கட்டுக்காக அறப்போர் நடத்திய மாணவர்களைக் கைது செய்யும் நோக்கத்தில் அவர்களின் பெற்றோர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.

* ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்ரவரி 28 இல் அகில இந்திய வேலை நிறுத்தம்.

* ஜல்லிக்கட்டுப் போராட்ட கலவரம் - நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்தியுள்ளது.

* கப்பல் விபத்தால் கடல் நீரில் எண்ணெய்ப் படலம் மிதக்கும் விவகாரம் தொடர்பான மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை.

* கப்பல் விபத்தால் கடலில் மிதக்கும் எண்ணெய்க் காரணமாக ஆமைகள் இறப்பு!

* 5 மாநிலத் தேர்தலில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தேர்தலில் முன்னிறுத்தி அதற்கான வாக்கெடுப்பாக பி.ஜே.பி. அறிவிக்குமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்.

* கருப்புப் பணத்தை மீட்பதற்குத்தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்று தொடக்கத்தில் சொன்ன மத்திய அரசு, பணமில்லா பரிவர்த்தனைக்காகத்தான் அந்த முடிவு என்று கூறுவது முரணானது என்கிறார் காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா.

* சட்ட விரோத பணவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் அரிநாராயணன் ராவுக்கு ஏழு ஆண்டு சிறை.

* பஞ்சாப் மாநில வேட்பாளர்கள் 15 சதவிகிதம் பேர் குற்ற வழக்கில் சிக்கியவர்கள்.

* தென்னாப்பிரிக்காவில் காந்தியாரால் தொடங்கப்பட்ட ‘டால்ஸ்டாஸ் பண்ணை’ புதுப்பிக்கப்பட்டுள்ளது.

* காஷ்மீர் பனிப்பொழிவில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 20 லட்சம் நிதி தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner