எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவிலில் உண்டியல் கொள்ளைதிருப்பூர், பிப்.2 திருப்பூர் வேலம்பாளையம் அருகே உள் ளது சோளிபாளையம். இங்கு ராஜகாளியம்மன்கோவில்உள் ளது. இந்த கோவிலின் பூசாரி யாக உள்ளவர் நடராஜன்.

இவர் சம்பவத்தன்று கோவில் நடையை சாத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். காலையில்கோவிலுக்குவந்து பார்த்தபோது கோவில் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சிய டைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை காணவில்லை. இது தவிர அம்மன் கழுத் தில் கிடந்த தாலியும் திருடப் பட்டிருந்தது. பீரோ திறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந் ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

அப்போது ஒரு காட்டுப் பகுதியில் இரண்டு உண்டியல் கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டிருந்தது. 2 உண்டி யல்களில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்தகாவல்துறையினர்கொள் ளையர்களை தேடி வருகிறார் கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner