எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் கடலின் எண்ணெய்ப் படலம் காரணமாக மீன் வியாபாரம் கடும் பாதிப்பு.

* ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்க நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மாநில  தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

* கடலில் படிந்துள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றிட 150 தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.

* மத்திய நிதிநிலை அறிக்கையில் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவில் 17 விழுக்காடு அதிகரிப்பு.

* காவிரி, குண்டாறு திட்டத்துக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால் தென் மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தி.

* மத்திய நிதிநிலை அறிக்கை குறிக்கோள் ஏதுமில்லாத வெற்றுக் காகிதம் என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.

* அடுத்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.2 சதவிகிதம்.

* தமிழ்நாடு அரசு பொதுக் கணக்குக் குழுத் தலைவராக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.இராமசாமி நியமனம்.

* கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு.

* கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.5,700 கோடி செலவிடப்படவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

* தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner