எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இளைஞர்களுக்கு நீதிபதி கோபால் கவுடா அழைப்பு

கொச்சி, பிப்.3- தனியார் துறையிலும் இடஒதுக் கீட்டிற்காக நாடு முழுவதும் உள்ள இளை ஞர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டுமென நீதிபதி கோபால் கவுடா அழைப்பு விடுத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாடு கொச்சி மாநகரில் பேரெழுச்சியுடன் துவங்கி நடை பெற்று வருகிறது. வியாழனன்று காலை நடைபெற்ற துவக்க அமர்வில், மாநாட்டை துவக்கி வைத்து ஒடிசா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோபால் கவுடா உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நமது நாடு மிகப்பெரும் சிக்கல்களை சந் தித்து வரும் சூழலில் கொச்சியில் வாலிபர் சங்கத்தின் மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் கருத்து வேலை, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்காக போராடுவோம் என்பது. இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறாகவும், தத்துவமாகவும் அமைந்துள்ளது. இதுதான் தேசத்தந்தை காந்தியடிகளின் கனவாகவும் இருந்தது. வெகுஜன மக்கள் இயக்கங்கள், வாலிபர் அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தோம். அதனையடுத்து ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறியது.

இளைஞர்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்

இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய, அடிப்படைக்கூறு.100கோடிக்கும்அதிக மான மக்கள் தொகை கொண்ட சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியசமூகத்தின்இளமையும்துடிப்பும் கொண்டஇளைஞர்களைபாதிக்கின்றமிகப் பெரிய பிரச்சினையான வேலையில்லா திண்டாட்டத்துக்குதீர்வுகாணும்வகை யில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறதா? 74 சதவீத மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்க ஆண்ட, ஆளுகின்ற மத்திய - மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய இளைஞர்கள் மிகப்பெரும் பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

அடுத்தடுத்து ஆளுகின்ற அரசுகள் தங்கள் தவறான கொள்கைகளால் ஒரு துடிப்புமிக்க, வளர்ச்சியடைந்த, புதிய இந்தியாவை உரு வாக்க நமது நாட்டிலுள்ள வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தி னால் தான் நமது மாநாட்டு கருப்பொருளாக வேலைக்காக போராடுவோம் என்ற முழக் கத்தை வைத்துள்ளோம். நாம் இந்திய விடுத லைக்காகப் போராடியுள்ளோம்.

விடுதலை அடைந்துள்ளோம். எழுதப் பட்ட அரசியல் சட்டத்தை பெற்றுள்ளோம். ஜனநாயக குடியரசு நாடாக உருவாகியுள்ளது. மக்களால் மக்களுக்காக மக்களே தமக்கான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம். இறையாண்மை என்பது நாட்டின் குடிமக்களிடம் தான் உள்ளது. அரசாங்கம் என்பது ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்அனைத்துவிதிகளையும் அமல் படுத்தவே என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தி அவர்களின் கண்களைத் திறக்க நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். இந்தியஆட்சியாளர்கள்நாட்டிலுள்ளவேலை யில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினை களை தீர்க்க தவறும்போது நீங்கள் போராட முன் வரவேண்டும்.

இன்றுஜனநாயகத்தின்பெயரால்அரசி யலில் கிரிமினல் மயம், தேர்தல்கள் நடத்து வதில் ஊழல்கள், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில்கோடிக்கணக்கில்பணம்புர ளுகிறது.நமதுஅரசமைப்புசட்டம்சம உரிமையையும்,சமவாய்ப்பையும்முன்னி லைப்படுத்துகிறது.ஜனநாயகம்மற்றும் மதச்சார்பின்மைக்கிடையேநெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய நாடாளுமன்றத் தில் உள்ள 442 உறுப்பினர்கள் யாரை பிரதி நிதித்துவபடுத்துகிறார்கள்? பெரும்பான்மை மக்களையா? இளைஞர்களையா? விவசாயி மற்றும் உழைக்கும் வர்க்கத்தையா? விவசாயி களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, நாட்டு மக்களுக்கு எதிரான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். நாட்டு மக் களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் தவ றான பொருளாதாரக் கொள்கையால் பல லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

முக்கிய துறைகள் தனியாரிடம்...

இதனால் நாட்டில் பல குடும்பங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. முக்கியத் துறைகள்தனியாரிடம்சென்றபிறகு சீரழிக் கப்பட்டுள்ளது. நீங்கள் தனியார் துறை யிலும் இட ஒதுக்கீட்டுக்காக போராட வேண்டும். மதச்சார்பின்மை குறித்து சில கட்சிகள் தங்கள் ஆபத்தான கருத்துகளைப் பரப்பி வருகின்றன. அரசமைப்புசட்டத்தின்படிஅனைத்துமதத் தவரின் வழிபாட்டு உரிமைகளும் பாது காக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது தங்கள் கருத்துக்களை திணிக்கின்றனர். நீங்கள் இந்த நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். நாட்டில் உள்ள உழைப்பாளி மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். விவசாய துறை பெருமளவில் அழிக்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பெயரால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் என்ற பெயரில் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி சீரழிக்கப்படுகிறது. இந்த அநீதிகளுக்கெதிராக நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner