எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தியபிரதேச  (பி.ஜே.பி.) அரசு குற்றவாளிகளுக்கு

மறைமுகமாக துணை போனது மாவட்ட நீதிபதி கண்டனம்

திவாஸ் (மத்தியப்பிரதேசம்), பிப்.6 ஆர்.எஸ்.எஸ். சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கில்  சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட எட்டுபேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலை யில், மத்தியப் பிரதேச மாநில திவாஸ் நீதி மன்றம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பினை அளித்தது. அத்தீர்ப்பில் மத்திய புலனாய்வு அமைப்பு கொலைவழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதா ரங்களை அளிக்கவில்லை என்று கூறி, அனைவரையும் கொலை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

மத்தியப் புலனாய்வுக் குழுவுக்கும், காவல் துறைக்கும் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் மதுசூதன் ஆப்தே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய புலனாய்வுக் குழு இவ்வழக்கில் தீவிரமாக விசாரணை செய்யவில்லை.

கொலை வழக்கு விசாரணையில் பார பட்சத்துடன் அல்லது அவர்களுக்கே தெரிந்த காரணங்களால் செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கு விசாரணையின்போது நீதி மன்றத்தில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த திலீப் ஜக்தாப் உள்பட  35பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

கொலைவழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவரான சாமியாரிணி பிரக்யா தாக்கூர் ஏற்கெனவே, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புள்ளவராக 2008ஆம் ஆண் டில் குற்றம் சுமத்தப்பட்டவர் ஆவார்.

2007ஆம் ஆண்டு சம்ஜூவாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் லோகேஷ் சர்மா, ஹர்ஷத் சோலங்கி மற்றும் ராஜேந்திர சவுத்ரி உள்ளிட்டவர்களுடன் சாமியாரிணி பிரக்யா தாக்கூர் பேரிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்துத்துவா பயங்கரவாதம் என்பதாக கடந்த 10 ஆண்டுகளில் குண்டு வெடிப்புகள் நடந்து வந் துள்ளன.  இக்கொலைவழக்கில் தொடர்ச்சியானநீண்டகாலவழக்குவிசா ரணையின் முடிவில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் விடுதலையாவது என்பது முன்னேற் றமானதா? அல்லது வழக்கின் விசாரணைகளில் பின்னடைவா? என்று கருதக்கூடிய அளவில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கொலையா? பயங்கரவாதமா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரான சுனில் ஜோஷியின் கொலை வழக்கானது சாதாரண கொலை வழக்காகக் கருதப்படாமல், பயங்கரவாதங்களின் விளைவான கொலை வழக்காகக் கருதப்பட்டு விசாரணைகள் நடைபெற்று, தற்போது சாதாரண கொலை வழக்காகவே முடிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-.பிரச்சாரகர்சுனில்ஜோஷி படுகொலை வரையிலும் சாமியாரிணி பிரக்யா தாக்கூருக்கு மிகவும் நெருக்கமானவராகவே இருந்து வந்துள்ளார். சுனில் ஜோஷி 29.12.2007 அன்று  திவாஸ் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். காங்கிரசு கட்சிப்பிரமுகர் பையார்சிங் நினாமா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சுனில் ஜோஷிமீது குற்றம் சுமத் தப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் அவர் வசித்துவந்த அறைக்கு சில மீட்டர் இடைவெளியில் ஜோஷி சுட்டுக் கொல் லப்பட்டார்.

காவி பயங்கரவாத வழக்குகளில் ஜோஷியின் தொடர்பு இருந்துள்ளது. ஆஜ்மீர் குண்டு வெடிப் பில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக மத்திய புலனாய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜோஷி கொல்லப்பட்ட வழக்கு தொடக்கத்திலேயே கிடப்பில் போடப் படுகின்ற நிலை இருந்தது. ராஜஸ்தான் மாநில பயங்கரவாதத்துக்கு எதிரான குழுவினரிடம்  சோலங்கி என்பவர் சிக்கிக் கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து  2010 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநில காவல் துறையினர் வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கினார்கள். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமச்சரன் பாடீல் என்பவரால் சோலங்கி சிக்கினார்.

அதே மாலேகான் குற்றவாளி

பிரக்யா தாக்கூரைத் தொடர்ந்து, மாலே கான் இரண்டாம் குண்டு வெடிப்பில் 2008ஆம் ஆண் டில் மகாராட்டிர மாநில பயங்கரவாதத்துக்கு எதிரான குழுவினரால் ராமச்சரன் பாடீல் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

2007ஆம் ஆண்டு சம்ஜூவாதா குண்டு வெடிப்பு மற்றும் 2008ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளில் பிரக்யா தாக்கூர் தொடர்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டுள்ளதால், காவி பயங்கரவாதம் குறித்த வழக்கின் தொடர்ச்சியாக, ஜோஷி யின் கொலைவழக்கையும் விசாரணை செய் யப்போவதாக 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய புலனாய்வுக்குழு விடுத்த கோரிக்கையை  மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஜோஷி கொலை வழக்கில், 2014ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் 8 பேர் மீதான குற்றப் பத்திரிகையை மத்திய புல னாய்வுக்குழு அளித்தது. சர்மா மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் பிரக்யா தாக்கூர் மறைமுகமான ஒப்புதலின்பேரில் 15 நாள்கள் ஜோஷி கொலைகுறித்து திட்டமிட்டார்கள். பிரக்யா தாக்கூரிடம் ஜோஷியின் பாலியல் அத்துமீறல்கள்தான் கொலை செய்யுமளவிற்கு ஆனது. ஜோஷி கொல் லப்பட்ட அன்றிரவு ஜோஷியின் அறைக்கு சென்று பிரக்யா தாக்கூர் ஒரு பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். ஜோஷியின் கொலை வழக்கை ஆராயும்போது, புலனாய்வு  விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சிகரமானதாகவும், பயங்கர வாதம் மற்றும் சதித்திட்டங்கள் என மாபெரும் காவிப்பயங்கரவாதத்துடன் பின்னப்பட்டுள்ள வலையாக உள்ளது.

ஒரு பெட்டி - மர்மங்கள்!

குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல் களின்படி, பிரக்யா தாக்கூர் எடுத்துச் சென்ற பெட்டியில் குண்டுவெடிப்புக்குத் தேவையான பொருள்கள் இருந்துள்ளன. பின்னாளில் அப்பெட்டி ராம்ஜி கல்சங்காரா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு(2008), சம்ஜூவாதா (2007), மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு( 2007) ஆஜ்மீர் ஷெரிப் (2007) உள்ளிட்ட பல்வேறு பயங் கரவாத செயல்களில் குற்றம் சுமத்தப்பட்டு தேடப் பட்டுவரும் குற்றவாளியாவார் இந்த ராம்ஜி கல்சங்காரா.

அதே ஆண்டில், போபாலில் உள்ள மத்திய புலனாய்வுக்குழுவின் சிறப்பு நீதி மன்றம் ஜோஷியின் கொலை வழக்கை சாதாரணமானது என்றும், புலனாய்வு அதிகாரிகள்குறிப்பிட்டதைப்போல், அட்ட வணைப்படுத்தப்படும்குற்றங்களின் தொடர்ச்சி அல்ல என்றும் குறிப்பிட்டுவிட்டு,  சிறப்புநீதிமன்றத்திலிருந்துமத்தியபிரதேச காவல்துறையினர் ஏற்கெனவே குற்றப் பத்திரிகையை அளித்த திவாஸ் நீதிமன்றத்துக்கு மாற்றியது.

அதன்பிறகு முந்தைய விசாரணையில் கிடைத்த ஆதாரங்களான துப்பாக்கி வைத் திருத்தல், துப் பாக்கிகளைப் பயன்படுத்தியமை உள்ளிட்டவற்றை அழித்துவிட்டு, திவாஸ் நீதிமன்றத்தில் காவல்துறைத் தரப்பு புதிய குற்றப்பத்திரிகையை அளித்தது.

இரண்டு குற்றப் பத்திரிகைகள்

அரசு வழக்குரைஞர் கிரிஷ் மூங்கே கூறும்போது, “இரண்டு குற்றப்பத்திரிகைகளால் குழப்பங்கள்ஏற்பட்டன.மத்தியபுல னாய்வுத்துறையுடன் இணைந்து காவல் துறையினர்வழக்கில்புலனாய்வுவிசாரணை களை தொடர முடியாமல், இரண்டு விதமாக குற்றச்சாற்றுகளையும் குற்றப்பத் திரிகைகளையும் காவல் துறையினர் அளித்துள்ளார்கள் என்றார்.

மத்தியப்பிரதேச மாநில அரசு ஜோஷி கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஆய்வு செய்து, மேல்முறையீடு செய்யவேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner