எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.6 அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் விரைவில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், தற்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன் னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் வித்யா சாகர்ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும், தமது தலைமையில் செயல்படும் அமைச்சரவையை கலைத்து விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுற்றதை அடுத்து, கடந்தாண்டு டிசம்பர் அய்ந்தாம் தேதி தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல் வம் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.  ஓ.பன்னீர் செல்வத்தின் பதவி விலகல் கடிதத்தை  ஏற்றுக்கொண்டார் ஆளுநர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner