எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ராஜபாளையம் நகருக்குப் பல வெளிநாடுகளிலிருந்து 268 வகை அரிய பறவைகள் வந்துள்ளனவாம்.

* தோல் பொருள்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத அளவில் இயங்கவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கூறப்பட்டது.

* மாநில அளவிலான உதவிப் பேராசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு (ஸ்லெட்) பிப்ரவரி 12 முதல் ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம்.

* பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி முடிகிறது.

* தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்துக்குப் பட்டா கோரி தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் மக்கள் கடந்த 8 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்களாம்.

* மத்திய நிதி அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை சதவிகிதத்தில் 3.71 ஆகும். (அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 4.57 சதவிகிதம்).

* முதலமைச்சரின் தனி அதிகாரியாகவிருந்த சாந்தா ஷீலா நாயர் பதவியிலிருந்து விலகினார்.

* புயலுக்கும், வறட்சிக்கும் நிதியுதவி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பிப்ரவரி 20 இல் மறியல் நடைபெறும் என்று தமிழக சி.பி.அய். செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

* தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ்  சர்மா  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner