எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.8 டில்லியிலுள்ள புகழ்பெற்ற கல்காஜி கோயிலில் தனது இரு சகோதரிகள் பூஜை செய்வதற்கு எதிராக அக்கோயில் பூசாரி ஒருவர் தொடுத்த வழக்கில், “கோயில்களில் பெண்கள் ஏன் பூஜைகள் செய்யக் கூடாது?’ என்று அவரிடம் டில்லி உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அவர் கீழமை நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில், அவரது இரு சகோதரிகளும் கோயிலில் பூஜை களை முன்னின்று நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், கோயிலில் வசூலாகும் காணிக்கை பணத்தில் அந்த பெண்களுக்கும் பங்கு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, டில்லி உயர்நீதிமன்றத்தில் அந்த பூசாரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பி.டி.அகமது, ஆசுதோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்தார்.

“கல்காஜி கோயிலில் காலம் காலமாக ஆண்கள்தான் பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர்’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:

தற்போது காலம் மாறிவிட்டது. கோயில்களுக்குள் நுழைவதற்கு, பெண்களுக்கு தடை விதிக்க முடியாது. எந்த வழிபாட்டுத் தலங் களுக்குள்ளும் பெண்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

கோயில்களில் பெண்கள் ஏன் பூஜைகள் செய்யக்கூடாது? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner