எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி பி.ஜே.பி.யை இங்கு கொண்டு வர பி.ஜே.பி. எந்த முயற்சியும் செய்யவில்லை என்று நான் சொல்லவும் முடியாது.’’

(எஸ்.குருமூர்த்தி, ‘ஜூனியர் விகடன்’,

12.2.2017, பக்கம் 32)

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

கேள்வி: அடிக்கடி சுப்பிரமணியம் ஸ்வாமி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவதும், பிறகு பா.ஜ.க. தரப்பில் யாராவது ஒருவர் ‘சுப்பிரமணியம் ஸ்வாமியின் கருத்து, அவரது சொந்தக் கருத்து’ என்று விளக்கம் தருவதும் வாடிக்கையாக உள்ளதே, சரியா?

பதில்: சுப்பிரமணியம் ஸ்வாமி மனது இன்னும் முழுமையாக பா.ஜ.க.வில் இணையவில்லை. ஒருவிதத்தில் அது முடியாததும்கூட. எந்த சுதந்திரமான அறிவு ஜீவியும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது என்பது சுலபமல்ல. ஸ்வாமி ஒரு சுதந்திரமான அறிவுஜீவி என்பதை யாரும் மறுக்க முடியாது.

(எஸ்.குருமூர்த்தி, ‘துக்ளக்‘, 15.2.2017, பக்கம் 13)

இதற்குப் பெயர்தான் பூணூல் பாசம் என்பது.

ஒரு கட்சிக்குள் ஒருவர் இருப்பாராம் - அந்தக் கட்சி அவருக்கு ஒரு எம்.பி., பதவியைத் தூக்கிக் கொடுக்குமாம்.

ஆனாலும், அந்த ஆசாமியின் மனது அந்தக் கட்சியில் முழுவதுமாக இணையாதாம். அப்படிப்பட்டவர் ஒரு அறிவு ஜீவியாம். ஒரு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் அவரால் இருக்க முடியாதாம். (கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கட்சியில் இருக்கலாமாம்) காரணம் அவர் ஒரு அறிவுஜீவியாம்.

ஒரு பார்ப்பனர் இன்னொரு பார்ப்பனரைக் காப்பாற்ற எப்படியெல்லாம் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறார் பார்த்தீர்களா?

இதற்குப் பெயர்தான் பூணூல் பாசம் என்பது;  நம் மக்களுக்கு இந்தப் புத்தி எல்லாம் எப்போது வரப்போகிறது?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner