எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, பிப்.9 மகாராட்டிர மாநில உள் ளாட்சித் தேர்தலில் பெண்களின் வாக்கு களைக் கவர்வதற்காக மோடியின் படம் போட்ட சேலைகளை தயாரித்துள்ளதாம் பாஜக.

2014 ஆம் ஆண்டு மக்களவைக்கு நடை பெற்ற பொதுத்தேர்தலின்போது, பாஜகவின் சின்னத்ததுடன் கூடிய சேலைகளை அணிந்த பெண்களைக்கொண்டு வாக்கு சேகரிப்பில் பாஜக ஈடுபட்டது.

தற்போது, மோடியின்உருவப் படம் போட்ட சேலைகளை பாஜக களத்தில் இறக்குகிறது.

பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா கட்சி முறித்துக்கொண்டுள்ள நிலையில், மகாராட்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் வாக்குகளை முன்னிறுத்தி பெற்றிட, தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும்  பெண்களுக்கு அளித்திட மோடியின் உருவப் படம் போட்ட சேலைகளை பாஜக உருவாக் கியுள்ளது.

இம்மாத இறுதியில்,  மும்பை மாநக ராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மகா ராட்டிர மாநிலத்தில் கூட்டணியில் இருந்த சிவசேனா கடுமையான சாடல்களுடன் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண் களின் வாக்குகளைக் கவர்வதற்காக பாஜக, மோடியின் உருவப் படத்தைப் போட்டு காவி வண்ண சேலைகளை தேர்தல் பரப் புரைக்கு செல்லும் பெண்களுக்கு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.

பண மதிப்பிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் மோடியின் உருவப் படம் போட்ட சேலையுடன் பெண்கள் வாக்குகளை சேகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த சேலைகளை அணிந்த பெண்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் களமிறக்கப்படுவார்கள் என்றும், சிவசேனாவுக்கு மாற்றாக பாஜக வாக்குகளை பெண்களிடமிருந்து பெறும் என்றும் நம்புவதாக பாஜக தரப்பு கூறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner