எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, பிப்.9 மகாராட்டிர மாநில ஆளுநரும், தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநரு மாகிய வித்யாசாகர்ராவ்மீது அதிமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் புகார் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் பொதுச்செய லாளர் சசிகலா, அதிமுக சட் டமன்ற உறுப்பினர்கள் சார்பில் சட்டசபைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமிழகத்தில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ், தமி ழகத்தில் இல்லாததால் அவர் பொறுப்பேற்பது தள்ளிப் போனது.

இந்நிலையில், இன்று (9.2.2017) நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்டனர். அப்போது, சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் வித் யாசாகர்ராவ் கால தாமதம் செய்வதாக புகார் கூறினார்கள். அதிமுக நாடாளுமன்ற உறுப் பினர்களின் தொடர் அமளியால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப் பட்டன.

பின்னர் அவை கூடியதும் தமிழக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி அதிமுக நாடாளுமன்ற உறுப் பினர் வேணுகோபால் மக்கள வையில் கவன ஈர்ப்புத் தீர் மானம் கொண்டு வந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner