எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, பிப்.9 புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு (பிப்.7) குடியரசுத் பிரணாப் முகர்ஜியை மரி யாதை நிமித்தமாக அவர் சந் தித்து பேசினார். அப்போது அவருடன் சென்று இருந்த புதுவை அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியான ஜான்குமாரை குடியரசுத் தலைவருக்கு அறி முகப்படுத்தினார்.

பிரதமரின் ஆலோசகர் மிஸ் ராவை நேற்று காலை நாராயண சாமி சந்தித்துப் பேசினார். அப்போது புதுவை மாநிலத்தில் மத்திய தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அரசுப் பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிற்பகலில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்துப் பேசினார். அப்போது புதுவை மாநிலத்துக்கு கூடுத லாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று அவரிடம் நாராயணசாமி வலியுறுத்தினார். திட்டமில்லா செலவினங்களுக் கான நிதியை உயர்த்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதால் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களையும் மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிதித் துறை செயலாளரை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

முதல்அமைச்சர் நாராயண சாமி புதுவை மாநிலத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.100 கோடி வழங்குமாறு மத்திய வேளாண்துறை அமைச்சரிடம் கேட்க திட்டமிட்டு இருந்தார். அதேபோல் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரையும் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவர் டில்லியில் இல்லாததால் அவர்களை சந்திக்க முடிய வில்லை. இதன்பின் டில்லியில் இருந்து முதல்அமைச்சர் நாரா யணசாமி புதுவைக்குப் புறப் பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner