எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப்.9 தமிழ கத்தில் நிலவும் அரசியல் சூழ் நிலையை தனக்கு சாதகமாக்கி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் அபிஷேக் மானு சிங்வி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நிலவும் குழப் பமான அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, குழம்பிய குட் டையில் மீன்பிடிக்க, மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்ட மிடுகிறது.

இது மிகவும் தவறான, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான செயலாகும். தமி ழகத்துக்கு செல்லவேண்டாம் என்று ஆளுநருக்கு அறிவுறுத் துவது அவர்களது வேலை அல்ல.

சசிகலோவோ, பன்னீர் செல்வமோ யாராவது ஒருவரை முதல்வராக பிரமாணம் செய் தால், அவர்கள் பெரும்பான் மையை நிரூபணம் செய்யப் போகிறார்கள். இதில் ஆளுநர் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது.

இவ்வாறு ஆளுநர் தாமதிப் பதற்கான அரசமைப்புச் சட் டமோ, வழக்கமோ, மரபோ இடம் தரவில்லை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner