எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த ஜஸ்டிஸ் ஹரி.பரந்தாமன் (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி) தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

‘‘முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை ஆளுநர் ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு, ஆளுநர் அறி வுரையின் பேரில் காபந்து முதலமைச்சரான பன்னீர் செல்வம் அவர்கள் ராஜினாமாவை திரும்பப் பெற இடமே இல்லை என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு.

48 மணி நேரம் கழித்து முதல்வர் பன்னீர்செல்வம்  கோருவதை ஏற்று ஆளுநர் செயல்பட அரச மைப்புசட்டப்படி முடியாது.

ஆளுநர் மத்திய அரசின் கருத்துக்கேற்ப தனது முடிவை அறிவிக்க கால தாமதம் செய்வது தெரிகிறது.

இது குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும்.

உடனடியாக சசி கலாவை ஆளுநர் அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்து தமது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க சசிகலா அவர்களுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும்.

அதில் பெரும்பான்மையை சசிகலா நிரூபிக்கா விட்டால், பன்னீர்செல்வம் அவர்கள் தமது பெரும் பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கலாம்’’ என்றார் ஜஸ்டிஸ் ஹரி.பரந்தாமன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner