எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, பிப்.10 உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக தேசியச் செயலர் சிறீகாந்த் சர்மா உள்பட 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட உதவி ஆட்சியர் ரவீந் திர குமார் வியாழக்கிழமை தெரி வித்ததாவது:

பாஜக மூத்த தலைவர் சிறீகாந்த் சர்மா, அவருடைய வாகனத்தில் போலியான அனு மதிச் சீட்டை பயன்படுத்தினார். இது தேர்தல் விதி மீறலாகும்.

மதுரா சட்டப் பேரவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த வேட் பாளர் சியாம் சுந்தர் சர்மா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் தளம்ஆகியகட்சியினர்ஆகி யோர் அவர்களுடைய ஆதரவா ளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறி உணவு விநி யோகம் செய்தனர்.

எனவே தேர்தல் விதிகளை மீறியதாக பாஜக தேசியச் செய லாளர் சிறீகாந்த் சர்மா உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner