எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழக நிகழ்ச்சிகள் என்றாலே - அந்த மேடையில் எளிமையான முறையில், செலவில்லாமல் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா நடைபெறுவது ஒரு தனிச் சிறப்பாகும்.

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த ஈ.வெ.ரா.ம. அருள்மணிக்கும், கோபி குணசேகரனுக்கும் 26 ஆண்டு களுக்குமுன் (19.8.1990) திருமணத்தை நிறைவேற்றி வைத்தார் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவர்களின் மகன் அ.கு. பெரியார்செல்வம் - நாமக்கல் மாவட்டம் - பவானி குமாரபாளையம் என்.கோவிந்தராசன்- பாக்கியலட்சுமி ஆகியோரின் மகள் நதியா ஆகியோரின் ஜாதி மறுப்பு - காதல் திருமணத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் பலத்த கரஒலிக்கிடையே நடத்தி வைத்தார். ஈ.வெ.ரா.ம. என்பது திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துப் பிள்ளைகளின் தலைப்பெழுத்தாகும் (இன்ஷியல்). அதாவது பெரியார் - மணியம்மையார் அவர்களின் பெயர்களே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner