எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘தன் வினை தன்னைச் சுடும்!’

பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டாகக் குரல் எழுப்ப வேண் டியது அவசியம் என்று பிரிட்டன் எம்.பி.,க்கள் குழுவிடம் இந்தியப் பிரதமர் மோடி கூறினார் என்பது செய்தி.

நிலைக் கண்ணாடியைப் பார்த்து மோடி பேசுகிறாரோ  - தன் வினை தன்னைச் சுடும் என்பது இதுதானோ!


கடவுள்  சக்தி  சந்தி சிரிக்கிறது

கோவில் உண்டியல்  உடைத்து  பணம்  கொள்ளை

குளச்சல், பிப்.15 கன்னியாகுமரி மாவட்டம்  குளச்சல்  சாஸ்தான் கரை அருகே  பூவன்கரை பத்ர பகவதி அம்மன்  கோவிலுக்கு நேற்று  காலை  அப்பகுதி மக் கள்  வந்த  போது  கோவில் உண்டியல்  உடைக்கப்பட்டு அதிலிருந்த  பணம்  திருட்டுப்  போயிருந்தது.

இதைப் பார்த்து  அதிர்ச்சிய டைந்த  அப்பகுதி மக்கள்  மற்றும்  கோவில் நிருவாகிகள்  குளச்சல்  காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்தர்களை கடவுள்  பாது காப்பான்என்று நம்பி பக்தர்கள்  கோவிலுக்கு வருகின்றனர்.  ஆனால்,  இங்கே  தனது  பணத்தை  திருடனிடம்  பறி கொடுக்கிறது, கையாலாகாத  கடவுள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner