எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார்

தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி, புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவி ஏற்பு!

சென்னை, பிப்.16 தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமியும், புதிய அமைச் சரவையின் அமைச்சர்களும் பதவி ஏற்க வரு மாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று (16.2.2017) மாலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவையடுத்து,  5.12.2016 நள்ளிரவில் நிதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராகவும், அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள்.

சொந்த காரணங்களுக்காக என்று குறிப்பிட்டு,  ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு தொலை நகல் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகக் கடிதத்தை அனுப்பினார். அதன்பின்னர் புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும்வரை பொறுப்பு முதல்வராக தொடரும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல் வம் விலகியதையடுத்து, அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ள வி.கே. சசிகலா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழுத் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தேர்வு செய் யப்பட்டதைத் தொடர்ந்து வி.கே.சசிகலாவை முதல்வர் பொறுப்பிற்கு பதவி ஏற்கும் படி ஆளுநர் அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே முதல்வர் பொறுப்பிலிருந்து விலகல் கடிதத்தை கட்டாயத்தின் பேரில் அளித்ததாகவும், அதனை திரும்பப்பெற உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித் தார். யாரை முதல்வர் பொறுப்பேற்க அழைப்பது என்கிற சிக்கல் ஆளுநருக்கு இருந்ததாகக் கூறப் பட்டது. (ஆனால் சட்டத்தின் நிலை வேறு!)

செல்வி ஜெயலலிதா, வி.கே.சசிகலா உள் ளிட்டவர்கள்மீதான சொத்துக்குவிப்பு  மேல் முறையீட்டு வழக்கின்மீதான தீர்ப்பை உச்சநீதி மன்றம் 14.2.2017 அன்று அறிவித்ததையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப் பினர் குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிச்சாமி 14.2.2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். 124 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் 14.2.217 அன்று ஆளுநரை   எடப் பாடி பழனிச்சாமி சந்தித்தார்.  அதன்பிறகும் ஆட்சி அமைக்க அழைக்காததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச் சர்களுடன் ஆளுநர் மாளி கைக்கு நேரில் சென்று நினை வூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவையடுத்து, 134 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 124 பேர் ஆதரவுக் கடிதத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்திருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி கே.பழனிச் சாமியை ஆட்சியமைக்குமாறு  ஆளுநர் விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச் சாமி அவர்களும், முக்கிய அதிமுக பிரமுகர்களும் இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநரைச் சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ் இன்று (16.2.2017) அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்களால்  சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப் பாடி.கே. பழனிச்சாமி அவர்களை தமிழக முதல்வராக நியமித்துள்ளார்.  (இவர் இதற்கு முன்பு தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆவார்).

15 நாள்களுக்குள் தமக்குள்ள பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே இன்று மாலை 4.30 மணிக்கு சென்னைக்  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளி கையில் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் முதல் அமைச்சராகப் பதவியேற்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner