எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான எண்ணிக்கை 31 - ஆனால் இருப்பதோ 23.

* குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்போது, கடுங்காவல் என்ற வார்த்தையைச் சேர்க்க அதிகாரம் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதித்துள்ளது.

* உலகம் முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு வீணாகும் உணவுத் தானியம் 103 கோடி டன்! (என்ன கொடுமையடா!)

* வரும் கோடையில் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை 16 ஆயிரம் மெகாவாட் வரை செல்லுமாம்.

* எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய்ப் படலம் மீண்டும் தென்படுகிறது. (படலங்கள் பல உண்டு. அதில் இதுவும் ஒன்றோ!)

* பொது வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எஃப்) 8 சதவிகித வட்டி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* கூடங்குளத்தில் இரண்டாவது அலகு சோதனை உற்பத்தி தொடக்கம்.

* செல்வி ஜெ.ஜெயலலிதா வீட்டை நினைவகமாக மாற்றக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* தமிழ்நாட்டின் நலனைக் கோரியும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியும் பிப்ரவரி 20 ஆம் தேதிமுதல் 25 ஆம் தேதிவரை அனைத்து மாவட்டங்களிலும் சி.பி.எம். தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது.

* நெல்லை - செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner