எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து.

(முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உடனடியாக வாழ்த்துக்கு நன்றி கூறி உள்ளார்.)

- செய்தி.

‘‘எடப்பாடி பழனிச்சாமி   நாளை  முதலமைச் சராக நீடிப்பது சந்தேகமே! தி.மு.க.வையும் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்.''

- மத்திய இணையமைச்சர்

பொன்.இராதாகிருஷ்ணன் பேச்சு!

ஒரே கட்சி - ஒரே ஆட்சியின்

இரு குரல் மன்னர்களைப் பார்த்தீர்களா?

சு.சாமியின் ‘அருள்வாக்கு!'

‘‘தமிழ்நாட்டில் பி.ஜே.பி. காலூன்ற முடியாது!''

- சுப்பிரமணியசாமி

(பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்)

 

பூனைக்குட்டி வெளியில் வந்தது!

ஒ.பி.எசுடன் எச்.ராஜா சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேசினார் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

இதனிடையே ஜெயலலிதாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்வீட்டிற்குபா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா சென்றுள்ளார். செய்தியாளர் களைச் சந்திக்கவும் மறுத்து சென்றுவிட்டார்.

பி.ஜே.பி.தான்பன்னீர்செல்வத்தின்பின்னணி யில் இருக்கிறது என்று சொன்னது சரியாய்ப் போய் விட்டதே! பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

தினமணி கூறுகிறது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சவால் - மத்திய அரசுடனான உறவு. ஆளுநர் காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வம் குழுவினருக்கு மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவு இருந்ததுதான் காரணம் என்பது தெளிவு.

‘தினமணி' தலையங்கம், 17.2.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner