எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாக ஷுலுவாலிஜா ரமேஷ் பதவியேற்றுக் கொண்டார்.

* நாகாலாந்தில் புதிய முதலமைச்சராக லிசியெட்சு (வயது 81) பதவியேற்பு.

* அரசு இல்லத்தைக் காலி செய்யுமாறு  தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

* ஜெ. உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக கருநாடக மாநில அரசு செலவு செய்த ரூ.12 கோடியை தமிழ்நாடு அரசு கருநாடக அரசுக்கு அளித்திட வேண்டும்.

* அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, தினகரன், வெங்கடேசன் முதலியோர் நீக்கப்பட்டதாக மதுசூதனன் அறிவித்தார்.

* இந்தோனேசியாவில் மனிதக் குரங்கைக் கொன்று சாப்பிட்ட 3 பேர் கைது.

* கருத்துக் கணிப்பில் பதவியேற்ற ஒரே மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு உலகில் கடைசி இடம் கிடைத்துள்ளது.

* தமிழ்நாட்டில் நாளை நடக்கவிருக்கும் குரூப்- 1 தேர்வில் 85 காலி இடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி.

* சட்டமன்றத்தில் என்னைப் பார்த்து யாரும் சிரிக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சியினருக்கு, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* கல்வி உதவித் தொகைக்கு ஆதார் எண் கட்டாயம் என்கிறது மத்திய அரசு.

* சென்னையில் தொடர் கொள்ளைகள் காரணமாக 13 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது.

* பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.,க்கு ஓரிடம்கூட கிடைக்கப் போவதில்லை என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.

* நாடு முழுவதும் 34 நகரங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’ ரயில் பயணிக்கிறது.

* மக்களவைத் தேர்தலிலும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ் வாடி கட்சி கூட்டணி தொடரும் என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்.

* முதல்வர் யாராக இருந்தாலும் தமிழக அரசுக்கு ஆதரவு தொடரும் என்கிறார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு (அடிசக்கே - அடிசறுக்குகிறதா?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner