எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்லக்னோ, பிப்.19- பண மதிப்பு நீக்கம் பாஜகவை உலுக்கும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறி யுள்ளார்.

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற் கிடையே ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட கருத் தியலை பாஜக திணிக்க விரும்புகிறது. தேசத்தின் தூண்களான அமைப்புகளில் தங்கள் கருத்தியல் சார்ந்தநபர்களை நியமிக்கின்றனர். அவர்களது இந்தச் செயல்பாடுகள் பல அதிருப்திகளை கிளப்பியுள்ளது. இதுதான் பாஜக எதிர்ப்பலையை கட்டமைத்துள்ளது.

பொதுவாக ஏழைகள், நலிவுற்றோர், விவசாயிகள், தலித்துகள், சிறுபான் மையினர் ஆகியோருக்கு பாஜக ஆட்சி நிறைய வேதனைகளையே அளித் துள்ளது என்றார். பணமதிப்பு நீக்கம் ஓர் உதாரணம், விவசாயத்தை முழுதுமாக புறக்கணித்தது இரண்டாவது காரணம்.

குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல், நாடு முழுவதும் சிறுபான் மையினர்மீதான தாக்குதல்கள் என அனைத்துமே பாஜகவுக்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளன என்றும் ராகுல் கூறினார். பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பாக நாட்டின் தூணாக செயல்படும் ரிசர்வ் வங்கி என்ற நிறுவனத்தை பாஜக முழுதாககைப்பற்றியது.மத்தியரிசர்வ் வங்கியின் தன்னிச்சையான செயல் பாட்டைமுடக்கியதுஎனஅவர்குற்றம் சாட்டினார்.பணமதிப்புநீக்கம்,கடைசி யில் பொருளாதாரத்தை நொறுக்கியதில் போய்த்தான் முடிந்தது. ஏதோ ஒரு உலகத்தில்வாழ்ந்துகொண்டுஏதோ பெரிய முடிவை தாங்கள் எடுத்து விட்டதாக மோடிஅரசு கருதுகிறது.

ஆனால், பண மதிப்பு நீக்கம் பாஜக-வை பெரிய அளவில் உலுக்கும். நியாயமான பணப் பொருளாதாரத்தில் உள்ள அனைவரையும் இது பாதித்துள் ளது. இன்னொரு விஷயம் பண மதிப்பு நீக்கம் செய்ததென்னவெனில் வருமானவரித்துறையினருக்குவான ளாவிய அதிகாரம் அளித்தது. உ.பி. யில்மட்டும்10லட்சத்துக்கும்அதிக மான அறிவிக்கைகளை வருமானவரித் துறையினர் அனுப்பியுள்ளனர்.

எனவே வணிகத்துக்கான சாதகச் சூழலும் அடிவாங்கியது. சாதாரண மக்கள்மீதுகூட வருமான வரித் துறை யினரை ஏவிவிட்டனர் என்றும் ராகுல் சாடினார். ஏழை மக்கள், ஏன் வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்களே கூட தற் போது பணமதிப்பு நீக்கம் தவறு என்று கருதுகின்றனர். 2019 தேர்தல்வரை இந்த உணர்வு நீடிக்கவே செய்யும். எதிர்க்கட்சிகள் இந்த உணர்வை புரிந்துகொண்டு மாற்றுகளை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner