எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமாஷ் செய்யும் மோடி

உத்தரப்பிரதேச தேர்தல்: வேடிக்கைப் பேச்சுகள்

ஜனவரி 28 ஆம் தேதியன்று ராஜ்நாத் சிங், கன்னூஜ் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, ‘‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயி களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 24 மணிநேர மின்சார வசதி செய்து தரப் படும்‘’ என்று உறுதி மொழி அளித்தார்.

பிப்.11 லக்மிபூரில் நடைபெற்ற பேரணி யில் பேசிய மோடி கூறியதாவது:

‘‘தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர் பேசுவதையும்,  அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளையும் நம்பிவிடாதீர்கள், இவர்கள் சொல்வது எதையும் செய்வதில்லை. இதுவரை என்ன செய்தார்கள் என்பதை பட்டியலிடுங்கள் - ஒன்றுமே இருக்காது’’ என்று கூறினார் (இவர் பேச்சும் அப்படிதானே!) இவருக்கும் இது பொருந்தும்தானே!

பிப்ரவரி 15 ஆம் தேதி சஹரன்பூர் தேர்தல் பொதுக்கூட் டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ‘‘விவசாயிகளே, உங்கள் கடன்கள் தள்ளுபடி ஆகும் என்று நம்பிக்கை வைக்காதீர்கள், உங்களுக்கு வரும் லாபத்தில் அரசுக்கு வரி செலுத்துங்கள், கடனை திருப்பிச் செலுத்துங்கள், கடன்களை தள்ளுபடி செய்தால், அரசுக்கு சுமை ஏற்படும். அந்தச் சுமை உங்கள் மீதுதான் திணிக்கப்படும் என்பதை நினைவில் வையுங்கள்’’ என்றும் கூறினார்.


கீழடியில் உள்ளடியா?

சிவகங்கை யையடுத்த கீழடியில் அகழ்வாராய்ச்சி ஏன் தொடரப்படவில்லை என்று மாநிலங்க ளவை உறுப்பினர் திருச்சி சிவாவின் கேள்விக்கு,

நிறுத்தப்படவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

தள்ளி வைக்கப்படுகிறது என்றால் - எவ்வளவு காலத்திற்கு?

தள்ளுபடியா - தள்ளி வைப்பா?

ஒண்ணே ஒண்ணு...

உச்சநீதிமன்றத்தில் இதுவரை நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஆறே ஆறு. இப்பொழுதோ ஒண்ணே ஒண்ணுதான். (அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.பானுமதி!).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner