எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பன்னீர்செல்வம் அணியை பதவியேற்க பா.ஜ.க. அழைப்பு விடுக்காதது ஏன்?

பூனைக்குட்டி வெளியே மெல்ல மெல்ல....!

 

‘தினமலர்’, 19.2.2017

பா.ஜ., பின்வாங்கியது ஏன்?

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வில் தன்னைத் தானே பொதுச்செயலராக அறிவித்துக் கொண்ட, சசிகலாவுக்கு எதிராகக் கிளம்பியுள்ளதற்கு, பா.ஜ.,வின் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், தற்போது, பா.ஜ., கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, பா.ஜ.,வின் டில்லி வட்டாரங்கள், சில சுவாரஸ்ய மான தகவல்களைத் தெரிவிக்கின்றன. பா.ஜ.,வில் முக்கிய முடிவு களை எடுப்பவர்கள், மூன்று முக்கிய தலைவர்கள். இவர்களை கட்சியில் செல்லமாக, ‘முப்பெரும் குழு' என, அழைப்பது வழக்கம்.

ஜெ., உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது, பன்னீர் முதல்வராக இருந்தார். அப்போது அவர், மத்திய அரசுடன் நல்ல உறவில் இருந்தார். தமிழக பிரச்னைகள் குறித்து, மத்திய அரசுடன் பேசி, மாநிலத்திற்கு சாதகமான முடிவுகளை எடுக்க வைத்தார் பன்னீர். ஜெ., மறைவுக்குப் பின், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பன்னீருக்கு முழு ஆதரவு கொடுத்தது. மற்ற எந்த மாநிலத்திலாவது இப்படி நடந்திருந்தால், மத்திய அரசு வாய்மூடி மவுனமாக இருந்திருக்கும். சொல்லப்போனால், ஜெ., உயிரோடு இருந்திருந்தால், மத்திய அரசு இந்த அளவிற்கு உதவி இருக்குமா என்பது சந்தேகமே.

சசிகலாவுக்கு எதிரான போராட்டத்தை, ஓ.பி.எஸ்., ஆரம்பித்த உடனேயே, தமிழக அரசியல் எந்த பக்கம் போகிறது என்பதை, பா.ஜ.,வின் மூவர் குழு, உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்து விட்டது. மேலும், ஓ.பி.எஸ்., கோஷ்டியிலிருந்து ஒரு முக்கிய நபர், இந்த மூவர் குழுவைச் சந்தித்து, தங்கள் அணிக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். ‘உங்களிடம் போதிய, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனரா?' எனக் கேட்ட போது, ‘40, எம்.எல்.ஏ.,க்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவர்' என, அந்த பிரமுகர் சொல்லி இருக்கிறார். இதனால் தான், தமிழக ஆளுநர், யாரையும் ஆட்சி அமைக்க அழைக்காமல் ஒரு வாரம் தள்ளி வைத்தார். எம்.எல்.ஏ.,க்களைத் திரட்ட முடியாத, ஓ.பி.எஸ்.,மீது, பா.ஜ., தற்போது, கோபத்தில் உள்ளது.

 

‘நக்கீரன்' ஏடு (பிப்.19-21, 2017)

‘‘கூவத்தூர்ல இருந்து மாறு வேசத்துல எம்.எல்.ஏ. வந்தாருன்னதும், இன்னும் வேற யாராவது அணிமாற வாய்ப்பு இருக்கான்னு பா.ஜ.க. தரப்பு பல்ஸ் பார்த்து, அங்க 119 பேருக்குமேல் சசிகலாவுக்கு சப்போர்ட்டா இருக்காங்கன்னும், கண்கொத்தி பாம்பா வாட்ச் பண்ண ஆட்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓ.பி.எஸ். அணியைப் பலப்படுத்த வாய்ப்பில்லைன்னு டெல்லிக்குத் தெரிஞ்சிடிச்சி.''

‘‘அதுக்கப்புறம்தான் எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடிச்சிதா?''

‘‘ஆமாங்க தலைவரே, கார்டன் டீமோடு பா.ஜ.க. தரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பிச்சிது. இதுக்காக திவாகரனைத் தொடர்பு கொண்டாங்களாம். பா.ஜ.க.வுடன் கூட்டணின்னு பகிரங்கமா அறிவிக்கணும், அ.தி.மு.க. சைடில் ஒரு எம்.எல்.ஏ.வையாவது ரிசைன் பண்ண வச்சு, அந்தத் தொகுதியை பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுப்பதோட, பா.ஜ.க.வுக்குத் துணை முதல்வர் பதவியையும் தரணும்னு டிமாண்ட் வைக்கப்பட்டது. இதை கார்டன் ஏத்துக்கலை. அதன்பின், மத்திய அரசின் திட்டங்களை முழுமையா ஆதரிக்கணும், வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவைத் தரணும், எந்தக் காரணம் முன்னிட்டும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது. இதுக்கு சம்மதம்ன்னா, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சசி தரப்புக்கு உண்டுன்னு சொல்லப்பட்டுச்சு. கார்டன் தரப்பில் ஒப்புக்கொண்டு, அவங்களோட டிமாண்டை சொல்லியிருக்காங்க.''

‘‘அப்ப ஓ.பி.எஸ்.சை டெல்லி பா.ஜ.க. கழற்றி விட்டுடுச்சா?''

‘‘முழுசா அவரைக் கழற்றிவிடலை. அவரை இப்பவும் தன்னோட ஆளாத்தான் அது வச்சிருக்கு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner