எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிடந்தது கிடக்கட்டும்

கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை என்பதுபோல திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தரான சிறீ ராமாஞ்சுல ரெட்டி என்ற பண முதலை ரூ.16 லட்சம் செலவில் பட்டுவேட்டியைக் காணிக்கையாக அளிக்க வுள்ளாராம்.

இது ஏழை நாடு நம்புங்கள்.


 

நிலவே நிலவே ஓடி வா

நிலவில் இருந்து மின்சாரம்

விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை நம்பிக்கை

புதுடில்லி, பிப்.20 நிலவில் கொட்டிக் கிடக்கும் ஹீலியம் வாயுவை பயன்படுத்தி நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நிலவில் ஹீலியம்-3 என்ற வாயு ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது. நிலவில் சுரங்கம் தோண்டி அந்த மண்ணை பூமிக்கு எடுத்து வந்து, ஹீலியம் வாயுவை எளிதாக பிரித்து எடுக்க முடியும். இந்த வாயு மூலம் இந்தியாவின் எரிசக்தி தேவையை வேண்டிய அளவுக்கு பூர்த்தி செய்து கொள்ள முடியும். வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் அதற்கான இலக்கை அடைய முடியும். தற்போது அந்த திட்டத்துக்குத் தான் இஸ்ரோவும் முன்னுரிமை அளித்து வருகிறது.

நிலவில் இருந்து ஹீலியம்-3 வாயுவைப் பிரித்து எடுக்கும் திட்டத்தில், பிற நாடுகளும் ஈடுபட் டுள்ளன. அதனால் இனி வருங்காலங்களில் தேனிலவுக்காக, மக்கள் நிலவுக்கே செல்லக்கூடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner