எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சட்டப்பேரவை நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 22 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் உண்ணாநோன்புப் போராட்டத்தை தி.மு.க. நடத்துகிறது.

* மதுரை, வேலூர், அதிராமபட்டினப் பகுதிகள் பருவ நிலை மாற்றம் காரணமாகக் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன (17 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை!).

* மக்கள் பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தக் கோரி பிப்ரவரி 20 முதல் 25 முடிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தப் போவதாக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

* திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 35 சதவிகிதம் பேர் தேர்வு எழுதிட வரவில்லை.

* கடன் தொல்லை காரணமாக நாகை - குத்தாலம் வட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கண்ணதாசன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை.

* கட்சிக் கொறடாவின் ஆணையை மீறியதால் என் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிபோகும் என்பதை நான் அறிவேன் என்கிறார் சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ்.

* வியாழன் கிரகத்தில் மூன்று துணைக்கோள்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* உ.பி. தேர்தலில் ரூ.110 கோடி ரொக்கம் பறிமுதல்.

ரூ.2 லட்சத்துக்குமேல் பணம் கொடுத்து நகை வாங்கினால் வரும் ஏப்ரல் முதல் ஒரு சதவிகித வரி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner