எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் பி.ஜே.பி.,க்குத் தோல்வி பயம்!

பிரதமர் நரேந்திர மோடியின்

மதவாத வெறிப்பேச்சு!

பல்வேறு தளங்களிலும் கடும் எதிர்ப்பு!

பதேபூர், உ.பி., பிப்.20 அகிலேஷ் தலைமையினாலான அரசு ரம்ஜானுக்கு தடையில்லாமல் மின்சாரம் தருகிறது. ஆனால், தீபாவளிக்கு அதேபோல் தரமறுக்கிறது. ஊர் ஊருக்கு இஸ்லாமிய கல்லறைகள் உண்டு. ஆனால் இந்துக்கள் தங்கள் உறவுகளின் பிணத்தை எரிக்க எங்கோ உள்ள எரிமேடைக்குச் சென்று எரிக்க வேண்டியுள்ளது என்று மோடி பேசியுள்ளார். மோடியின் மத ரீதியான இந்தப் பேச்சினால் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அய்ந்துமாநிலதேர்தல்தேதிஅறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. கோவா, பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங் களில் தேர்தல் முடிந்துவிட்டது.உத்தரப்பிர தேசம், மணிப்பூரில் மட்டும் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் உத்தரப்பிர தேசத்தில் அதிக சட்டமன்றத் தொகுதிகள் இருப்பதால் 11- கட்டங்களாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 3 கட்டங்களாக உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மீதமுள்ள இடங்களுக்காக தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது.

கட்டுப்பாடில்லாக் காட்டாற்றுப் பேச்சு!

இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தனித்து களமிறங்கியுள்ள பாஜக மதவாத அரசியலைக் கையிலெடுத்து உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இந்து அமைப்புகளின் பின்னணியில் இருந்து கொண்டு இருபிரிவினரிடையே பிரிவினையைத் தூண்டி, மதவாதம் பேசி பாஜகவிற்கு வாக் களிக்குமாறு மிரட்டி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்வர்கியா, அதித்யநாத் யோகி, சாக்ஷி போன்ற சர்ச்சைக்குரிய பாஜக பேச்சாளர்களின் பேச்சில் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையவே கிடையாது.

நீதிமன்றம்மதவாதம்பேசிவாக்கு சேகரிக்கக் கூடாது என்று கண்டிப்பாக கட்டளையிட்டும். அதுபற்றிகவலைப்படாமல்ராமர் கோவில் கட்டுவோம், இஸ்லாமியர்களை துரத்தியடிப்போம், இஸ்லாமியர்கள் இந்துக் களைப் போல் வாழவேண்டும். இனி இந்துக்கள் தான் இந்தியாவை ஆள்வார்கள் என பல்வேறு சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகின்றனர்.

எப்போதும் இரண்டாம் (க)மட்டத் தலை வர்கள் இதுபோன்று பேசிவரும் போது மோடி வளர்ச்சிபற்றி பேசுவார்; ஆனால், நடந்து முடிந்த 5 கட்ட தேர்தல்களில் பாஜக கடுமையான தோல்வியைத் தழுவும் என்ற உளவுத்துறை அறிக் கையை அடுத்து பாஜக மேலிடமும், மோடியும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாயினர்.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரத்திற்கு இந்த தேர்தல் மூலம் அங்கீகராம் கொடுத்துள்ளனர் என்று மார்தட்ட காத்திருந்த மோடிக்கு தனது செயல் தவறானது என்று உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் காட்டிவிடக்கூடாது என்ப தில் அக்கறையாக உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலதேர்தலில் படுதோல்வி என்பதுமோடி யின் தனிப்பட்ட அவமானம் என்னும் முடி வெடுத்துள்ளார்.

மதவாத ஆயுதம் கையில்!

இந்த நிலையில் இனி வளர்ச்சி குறித்து பேசி மக்களை கவருவதைவிட மதவாதம் பேசி இந்துக்களின் வாக்குகளை மீதமிருக்கும் 8 கட்டமாக நடக்கும் தேர்தலில் மக்களை தங்கள் பக்கம் இழுத்துவிட மோடி மதவாத ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தானே  களமிறங்கிவிட்டார்.

இதன் அச்சாரமாக பதேபூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது அவர் கூறியதாவது:

‘‘உத்தரப்பிரதேசத்திலே யாருக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது? அகிலேஷ் கட்சி ஆட்சி நடத்தும் இந்த மாநிலத்தில் ரம்ஜான் காலத்தில் விரதமிருக்கும் 30 நாள்களுக்கு தடை யில்லாத மின்சாரம் தருகிறார்கள். ரம்ஜான் திருவிழாவில்பல்வேறுசலுகைகளைக்கொடுக் கிறார்கள். ஆனால், இதே சலுகைகள் இந்துக் களின் விழாக்களில் தொடர்கிறதா? நாம் கொண்டாடும் தீபாவளி அன்று தடையில்லாத மின்சாரம் தருகிறார்களா? ஏன் இந்தச் செயலைச் செய்கிறார்கள். நாம்(இந்துக்கள்) இவர்களுக்கு பெரியதாக தெரியவில்லை அப்படித்தானே? நான் பயணம் செய்துகொண்டே பார்க்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமியர்களுக்கான கல்லறைத் தோட்டம் உள்ளது. ஆனால் இந்துக் களுக்கான எரிமேடை உள்ளதா? நீங்கள் அவர்களுக்காக (இஸ்லாமியர்) கல்லறைத் தோட்டம் அமைத்துக் கொடுத்தீர்கள் என்றால் எங்களுக்காக (இந்து) தகனமேடையும் ஊருக்கு ஒன்று கட்டித்தரவேண்டுமல்லவா? இதை நான் கேட்டால் என்னை மதவாதம் பேசுகிறவன் என்று முத்திரை குத்துவார்கள். நியாயத்தைக் கேட்டால் இந்த முத்திரை எனக்கு குத்திவிடுவார்கள். ஆனால், நான் இதற்காக அஞ்சமாட்டேன், மக்களுக்கான எந்த ஒரு தேவையையும் மத வாதத்தின் பெயரால் அஞ்சி நான் பேசாமல் இருந்துவிடுவேன் என்று நினைக்கவேண்டாம்‘’ என்று கூறினார்.

ராமர் கோவிலைக் கட்டினால் மசூதியையும் உடன் கட்டுவார்களா?

இரண்டாம் (க)மட்ட தலைவர்கள் போல் மோடியும் தோல்விபயத்தில் பேசிய இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோடியின் கூற்றுப்படியே வைத்துக் கொண் டாலும் கூட ராமர் கோவிலைக் கட்டினால் கூடவே பாபர் மசூதியையும் கட்ட வேண்டும். இதை மோடி ஏற்றுக் கொள்வாரா என்றும் கேட்டு விவாதங்கள் கிளம்பியுள்ளன. உ.பி சட்டசபைத் தேர்தலில் இதுவரை 3 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner