எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழிவறை உங்கள் வீட்டில் இல்லையா? கல்யாணமும் கிடையாது போ என்ற குரல் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பகுதிகளில் கேட்கத் தொடங்கிவிட்டது. அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மவுலானா மமூத் ஏ மதானி குறிப்பிட்ட ஒரு தகவல் முக்கியமானது.

மூன்று மாநிலங்களில் இஸ்லாமிய திருமணங்களுக்குக் கழிவறை பிரச்சினை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கழிவறை கட்டாயமாக்கப்பட்டு விட்டது. இந்த உணர்வு பல்வேறு மாநிலங்களிலும் கிளம்பிவிட்டது. இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள மவுல்விஸ் மற்றும் முப்திஸ் பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் வீடுகளில் கழிவறை இல்லை என்றால், திருமணம் இல்லை என்று முடிவாகி விட்டது.

மதங்களைக் கடந்து இந்த நிலை உருவாகவேண்டும் என்று கூறுகிறேன் என்றார் மேனாள் எம்.பி.,யும் ஜமீத் உல்மா அய் ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளருமான மவுலானா மமூத் ஏ.மதானி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner