எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.21 திருவள் ளூர் வீரராகவ பெருமாள் கோயில் உட்பட 3 கோயில் குளங்களில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை - கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த வர் சந்தானகிருஷ்ணன். இவ ரது மனைவி துளசிபாய்(60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோயிலுக்கு வந்தனர். கோயிலுக்குள் செல் வதற்கு முன்பு கை, கால்களை கழுவ இருவரும் கோயில் குளத்தில் இறங்கினர்.

அப்போது, எதிர்பாராத விதமாக துளசிபாய் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். பொதுமக்கள் அவரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருவள் ளூர் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

அதேபோல், ஆந்திர மாநி லம், சித்தூர் மாவட்டம் நாக லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(26). இவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தாட்சாயினி(20) என்பவ ருக்கும், கடந்த ஆண்டு திரு மணம் நடந்தது.

இந்நிலையில், மாமனார் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த விஜயகுமார், செங்கரை காட்டுச்செல்லியம்மன் கோயில் குளத்தில் குளித்தார். அப்போது, ஆழமான பகுதி யில் சிக்கி நீரில் மூழ்கி உயிரி ழந்தார். இதுகுறித்து ஊத்துக் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், ஏகாம்பரநாதர் கேயிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள், துணி துவைக் கவும், குளிக்கவும் பயன்படுத்து கின்றனர். இந்நிலையில், குளத் தில் நேற்று அடையாளம் தெரி யாத, 55 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர், தீயணைப் புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner