எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

* தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடந்தவை குறித்து நேரில் தெரிவிக்க  சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குடியரசு தலைவரை பிப்ரவரி 23இல் சந்திக்கிறார்.

* கப்பலில் கசிந்த எண்ணெயின் அளவு தெரி விக்கப்படவில்லை என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

* வறட்சி நிவாரண நிதி விரைவில் வழங்கப்படும் என்று முதல்  அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

* வடகொரிய அதிபரின் உடன் பிறப்பு கிம் ஜாங் கொலை பிரச்சினை தொடர் பாக வடகொரியா - மலேசியா நாடுகளிடையே மோதல் முற்றுகிறது.

* ஜெர்மன் எதேச்சதிகாரி அடால்ப் இட்லர் பயன் படுத்திய தொலைபேசி ரூ.1.62 கோடிக்கு ஏலம் போனது.

* டில்லி இரயில் நிலை யம் கொரி இரயில்வே நிருவாகத்தின் துணையோடு அழகுபடுத்தப்படுகிறது.

* வங்கதேச எல்லையில் ரூ.2000 கள்ள நோட்டுகள் சிக்கின (மதிப்பு 96 ஆயிரம்).

* சம்பள உயர்வு கோரி 2 லட்சம் தோல் பதனிடுத் தொழிலாளர்கள் வேலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

*சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதாகக் கூறுவது வெறும் கண் துடைப்பே என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner