எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.21  நடுவர் மன்றத்தின் தலைவ ராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி பல்பீர் சிங் சவுகான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்ட ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவி காலியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் அபய் மனோகர் சப்ரே தற்போது காவிரி நடுவர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பரிந்துரையின் படி அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

காவிரி நீரைப் பங்கிட்டு கொள்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக் களை விசாரிக்க முகாந்திரம் உள்ளது என் றும், அவை விசாரணைக்கு ஏற்றவை என்றும் சமீபத்தில் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner