எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் தலைவர் கண்டனம்!

சட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே! இதுவே கடைசியாக இருக்கட்டும்!  - கி.வீரமணி

மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது என்றதும், அதனைக் கைவிட்டு, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தைச் செயல்படுத்துவதா? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது அது விளை நிலங்களைப் பாதிக்கச் செய்யக்கூடியது என்ற காரணத்தால் விவசாயப் பெருங்குடி மக்கள் கிளர்ந்து எழுந்ததால், அது கைவிடப்பட்டு, இப்பொழுது அதையே வேறு பெயரில் இயற்கை எரிவாயு என்று கூறி (ஹைட்ரோ கார்பன்) தஞ்சை டெல்டாவின் ஒருங்கிணைந்த பகுதி யான நெடுவாசலிலும் (புதுக்கோட்டை அருகே), காரைக் காலிலும், நெடுவாசலையடுத்து வடகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு பகுதிகளிலும், அத்திட்டத்தைச் செயல் படுத்திட மத்திய பி.ஜே.பி. அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனைக் கடுமையாக எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் முழுவதுமாக உறிஞ்சப்படும். கடல் நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் அனைத்தும் சுடுகாடாகி விடும். தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும். ஏற்கெனவே விவசாயம் சாகடிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் தன் குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வந்துள்ளது - பேராவூரணியில் நடைபெற்ற கழக மாநாட்டில்கூட (7.3.2015) கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உரிய முறையில் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதேபோல, புதுவை முதலமைச்சரும் காரைக்காலிலும் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை

22.2.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner