எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பலே பலே இராசா!

‘‘அதிர்ஷ்டத்தை நம்பி அல்ல; ஆவணங்களையும் - சட்டத்தையும் நம்பி வழக்கை நடத்துகிறேன்''

நீதிமன்றத்தில் ஆ.இராசாவின் அதிரடி பதிலடி!

புதுடில்லி, பிப்.23-  ‘2ஜி’ வழக்கில், நீதிபதியின் சரமாரியான கேள்விகளால், திணறிய, சி.பி.அய்., வழக்குரைஞர், ‘‘அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வெற்றி பெறட்டும்,’’ என, கூறியதும்,’’ ஆவணங்களையும், சட்டத்தையும் நம்புகிறேன்; அதிர்ஷ்டத்தை அல்ல,’’ என,  முன்னாள் மத்திய அமைச்சர், ஆ.இராசா பதிலடி தந்தார்.

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர் பாக, சி.பி.அய்., தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பிலும், வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், இறுதிகட்டமாக, சுருக்கமான வாத பிரதிவாதங்கள், துவங்கியுள்ளன.

நேற்று (22.2.2017) நடந்த விசாரணையின்போது, சி.பி.அய்., வழக்குரைஞர், குரோவர் வாதிட்டதாவது:

ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு வந்திருந்த, 575 விண்ணப்பங்களில், சில நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறுவதற்காக தன்னிச்சையாக தேதியை, இராசா மாற்றியுள்ளார்; இதற்கான கோப்புகளில், அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர். விசாரணையின்போது,தான் வெறுமனே ஆவணங்களில் கையெழுத்து போட்ட தாகவும், மனப்பூர்வமாக ஒப்புதல் தரவில்லை என்றும், அப்போதைய அரசு செயலாளர், மாத்துரே கூறியுள்ளார். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை கேட்டதும் கடும் கோபமடைந்த நீதிபதி, சைனி கூறியதாவது:

தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலாளர், கூடுதல் செயலாளர், சிறப்பு செயலாளர், உரிமங்கள் வழங்கும் இயக்குநர், துணை இயக்குநர் என அனை வருமே பதிவு செய்து ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுள்ளனர்; அதைத்தான், இராசா ஏற்றுள்ளார். அப் படியானால், இந்த நீதிமன்றம், ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.அய்., வழக்கு தொடர்ந்த பின், நீதிமன்றத்திற்கு வந்து, ‘நான் உடன்படவில்லை; வெறும் கையெழுத்துதான் போட்டேன்’ என்ற வாய்மொழி சாட்சியை, நம்ப வேண்டுமா?

அரசு செயலாளர், அமைச்சரவை செயலாளருக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமைச்சருக்கு அடிமை அல்ல. மனப் பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால், அதையாவது, தன் குறிப்பில் பதிவு செய்திருக்கலாமே; அதை, யாரும் தடுக்கப் போவதில்லையே. நிர்வாக சட்டத்தை நன்கு படித்துவிட்டு இந்த நீதிமன்றத்திற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், வாதங்களை வைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதியின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் ஆடிப் போன, சி.பி.அய்., வழக்குரைஞர், குரோவர் சிறிது நேரம் அமைதி காத்தார்.

அதன்பின் அவர் கூறியதாவது:

இந்த வழக்கில் கோப்பு பதிவுகளையும், வாய்மொழி சாட்சியங்களையும், உங்கள் முன் வைத்துள்ளேன். முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றம்தான். முடி வைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறட் டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஆ.இராசாவின் பதிலடி

அப்போது சட்டென எழுந்த ராசா, ‘‘ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்பு கிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல,’’ என பதிலடி தரவே, மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner