எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப்.24 நாடுமுழுவதும் கல்வித்துறை மற்றும் கலாச்சாரத் துறைகளில் பணி நியமனங்களைக் காணும் போது, அறிவுசா£¢ நிலைகளுக்கு முற்றிலும் எதிரான நிலையிலேயே மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இருப்பது வெளிப்படையாகத் தெரிவதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா சாடியுள்ளார்.

பெங்களூரு இலக்கியத் திருவிழாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு எட்டு அச்சுறுத்தல்கள் எனும் தலைப் பில் வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா  உரை யாற்றினார்.

அப்போது அவர் கூறும்போது,

“சமகால இந்திய வரலாற்றில், கடந்த 45 ஆண்டுகளாக உள்ள அனைத்து அரசுகளின் நடவடிக் கைகளையும் ஒரு வரலாற்று மாணவனாக கவனித்து வருகிறேன். டில்லியில் அதிகாரம் செலுத்தி வரு கின்ற அரசானது முன்பு எப்போதையும்விட, பல்வேறு பணி நியமனங்களில் தன்னை வெளிப் படுத்திக்கொண்டுள்ளது.

பஹ்லாஜ் நிகாலனி மற்றும் கஜேந்திர சவுகான் ஆகியோரின் நியமனங்களைக் காணும்போது, அவர்களின் பனி நியமனங்கள் எதை உணர்த்துகிறது என்றால், முற்றிலும் கல்வியாளர்களை இழிவு படுத்தி, இலக்கியம் மற்றும் கலைத்துறையை சீர்குலைப்பதாகவே இருக்கிறது.

சமூகத்தில் ஏதேனும் ஒரு வகையில் தங்களின் பங்களிப்புகளை அளித்துவருகின்ற அறிஞர் பெருமக் களையும், எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ள மறுத்து, தனக்கு நேரடியான தொடர்பில் உள்ளவர்களை மட்டுமே நிய மித்து வருவதன்மூலமாக,  நியாயமான நியமனங்களை புறந்தள்ளுகிறார் என்பதை இதுபோன்ற நியமனங்கள் உணர்த்துகின்றன.

அறிவுசார் நிலைகளுக்கு எதிராகவும், கலை மற்றும் கலாச்சாரங்களுக்கும் மதிப்பு அளிக்காமல் இருக்கின்றஅரசாகஇருந்துவருகிறது.ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டு, கல்வி, கலை, கலாச் சாரத்துறை பணி நியமன அறிவிப்புகளை வெளியிட் டுள்ளதன் மூலமாக, மூடிமறைத்த மதவெறி வெட்ட வெளிச்சமாகி வருகிறது’’ என்றார்.

கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் எம்.எம்.கல்புர்கி அனைவருமே ஒரேமாதிரியாக இந்து அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

பழைமைகளை ஏற்காமல், நாத்திக, பகுத்தறிவுக் கருத்துகளின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்தார்கள் என்பதால், பன்சாரே, தபோல்கர் மற்றும் கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டார்கள். இம்மூவருமே இந்து அடிப்படைவாதிகளால் ஒரே முறையில் கொல்லப்பட்டார்கள்.

எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை

அரசியல்வாதிகளில் பெரிய கட்சியினர், சிறிய கட்சியினர் என்கிற வேறுபாடுகளின்றி அனைத்து கட்சியினருமே முற்போக்கான கருத்துகளைக் கூறுகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப் படத்துறையினருக்கு எதிராகவே அடக்கமுறைகளை வெறியுடன் கையாண்டு வருகிறார்கள்.

1989ஆம் ஆண்டில் ராஜிவ் காந்தி, சல்மான் ருஷ்டி யின் ‘சாத்தானின் வேதங்கள்' நூலைத் தடை செய்தார். அதைப்பற்றி டில்லியில் சிதம்பரம் பேசுவதற்கு 25ஆண்டுகள் ஆயின. 25 ஆண்டுகளில் ஏன் அவர் பதவி விலகவில்லை?

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் எழுத்துக்களால், அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ஏன் பாதுகாக்க முனைப்பு காட்டவில்லை? இடதுசாரி அறிஞர்களும் அப்போது அவருக்காக போராட முன்வரவில்லை.

குஜராத் மாநிலத்தில் முதல்வராக மோடி இருந்த போதுகூட, உசைன் தோஷி குபாவுக்கு எதிரான வன்முறைகள் ஏற்பட்டன’’

இவ்வாறு வரலாற்று பேராசிரியர் ராமச்சந்திர குகா பேசினார்.

சாமியார்கள் குறித்து சாடல்

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா தம்முடைய டிவிட்டர் சமூக வலைப்பதிவில் அவ்வப்போது மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல் பாடுகளைக்கண்டித்து பதிவு செய்து வருகிறார்¢.

இந்திரா காந்திக்கு வழிகாட்டுவதற்கு சாமியார் வினோபாபாவே இருந்தார். தற்போது மோடிக்கு சிறீ சிறீரவிசங்கரும், வாசுதேவுமாக உள்ளனர்.

முந்தையகாலங்களில்சாமியார்கள்என்பவர்கள் துறவுநிலைகளை மேற்கொண்டு அறிவுநிலைகளை எய் தியதாகக் கூறுவார்கள். ஆனால், இன் றுள்ள சாமியார்கள் ஆட்சி அதிகாரங்களை உரு வாக்கிக்கொண்டு, புகழைத் தேடுபவர்களாக உள்ளனர்.

ரமணன், அரவிந்தர் முதல் ரவிசங்கர், வாசுதேவ் வரையிலும் சாமியார்களால் தாழ்வு நிலையே ஏற்பட் டுள்ளது.

இவ்வாறு ராமச்சந்திர குகா டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner