எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப்.24-  மத ரீதியாகப் பிளவுபடுத்தும் அமித்ஷாவின் பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரசு குற்றச்சாட்டி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சமாஜ்வாடி,- காங்கிரஸ் கூட்டணி யாகவும், பாஜ, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.

பாஜ தலைவர் அமித்ஷா நேற்று (23.2.2017) கோராக்பூரில் உள்ள சவுரி சவுரா பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், எதிர்க்கட்சிகளை மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்புடன் ஒப்பிட்டு பேசினார்.

ஊழல், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இந்த கசாப் களிடம் இருந்து மக்கள் விடுதலை பெறுங்கள். இத்தகைய தலை வர்களால் உ.பி.யில் வளர்ச்சி காண முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளை கசாப்புகள் என அமித்ஷா குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுர்ஜிவாலா

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில்,

தோற்றுவிட்ட தலைவர்கள்தான், இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவார்கள். எப்போதும் மோசமாக பேசுவதே அமித்ஷாவின் வேலை. கசாப்புகள் என்று அவர் கூறியது கண்டிக்கத்தக்கது என்றார்.

அபிஷேக் சிங்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,

அமித்ஷாவின் தீவிர மத உணர்வு வெளிப்பட்டுள்ளது. மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் அவர் பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner