எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பலராம்பூர், பிப்.24 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட் டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தமாநிலமுதல்வர்அகி லேஷ் யாதவ் சவால் விடுத்துள் ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பலராம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ், மேலும் கூறியதாவது:

மிகவும் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் மோடி, என் னுடன் சண்டையிடுகிறார். என்னோடு அவர் விவாதிக்க விரும்பினால், மற்ற விஷயங் களைப்பற்றி பேசக் கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் விவாதிக்க விரும்பினால், அதற்கு நான் தயாராக இருக் கிறேன்.

உத்தரப்பிரதேசத்துக்காக என்ன செய்துள்ளார் என்பதை அவர்பட்டியலிடுவாரா?சமாஜ் வாதிஅரசுஎன்னசெய்தது என்பதை நாங்கள் பட்டியலிடு வோம்.பிரதமர்மோடி,பல் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். வெளிநாடு களில் இருந்து இந்தியாவுக்காக எதையும் கொண்டு வந்திருக் கிறாரா? என்பதை அவர் தெரிவிக்கவேண்டும்.

மற்றொருபுறம்,பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ்,- சமாஜ்வாதி, -பகுஜன் ஆகிய கட்சிகளைச் சுருக்கமாக, “கசாப்’ என்று பெயரிட்டுஅழைத்தார்.அதில்,முதலெழுத்தான‘க’ என்றால்கபுதார்(புறா)என்றுபடித்திருக்கிறோம்.தேர் தலுக்குப் பிறகு, பாஜக தலை வர்களின் கரங்களில் உள்ள புறாக்களை மக்கள் விடுவித்து விடுவார்கள். தேர்தல் களத்தில் பாஜக தோல்வியைடைந்து விட்டதால், அந்தக் கட்சித் தலைவர்களின் மொழியும் மாறிவிட்டது.

மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல் வதற்கு சமாஜ்வாதி கட்சிக்கு வாக்காளர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என் றார் அகிலேஷ் யாதவ்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner