எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. மீது

பாலியல் வன்முறை வழக்கு

குர்கான், பிப்.24 பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.மீது ஒரு பெண் பாலியல் வன்முறை புகார் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வாக 2003 ஆ-ம் ஆண்டு முதல் 2008- ஆம்  ஆண்டு வரை இருந்தவர் விஜய் ஜோலி. இவர் மீது குர்கானை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 21- ஆம் தேதி பாலியல் வன்முறை புகார் அளித்தார். அந்தப் புகாரில், விஜய் ஜோலி 10- ஆம் தேதி குடிபோதையில் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என தெரிவித்தார். இதையடுத்து விஜய் ஜோலி மீது காவல்துறையினர் நேற்று (23.2.2017) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


குஜராத் சட்டசபையில் அடிதடி: எம்.எல்.ஏ.,க்கள் படுகாயம்

அகமதாபாத், பிப்.24 குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று, சட்ட சபையில், காங்., உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை எனக் கூறி, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காங்., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்ட காங்., எம்.எல்.ஏ.,க்கள் இரு வர், சபைகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இருவரையும் ‘இடைநீக்கம்’ செய்வதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்; பின், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில், சிலர் காயம் அடைந்தனர்.


உலக அளவில் இந்தியாவில் அதிகளவு தற்கொலைகள்

ஆய்வுத் தகவல்

புதுடில்லி, பிப்.24 உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தென்கிழக்காசிய மற்றும் பசி பிக் மேற்கத்திய மண்டலங்களைச் சேர்ந்த நாடுகளில்தான் அதிகளவு மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மண்டல நாடுகளில்தான் அதிகளவு தற்கொலைகளும் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. இவர்களில் பலர் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக, இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி, 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம், மனநலன் பாதிப்பு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஆண்களே அதிகளவு மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மனநலன் தொடர்பான சிகிச்சைகள், விழிப்புணர்வு திட்டப் பணிகள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அதிகளவு செயல்படுத்தப்பட வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner