எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொட்டூர், பிப்.24 கர்நாடகா மாநிலத்தில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் கொட்டூரில் உள்ள குருகோட்டேஷ்வரர் கோவிலில் தேரோட்டம் துவங்கியது. இத்தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்த நிலையில், தேர் திடீரென சாய்ந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

தேரின் அருகில் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் தேருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேரின் அடியில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக தேரின் அடியில் சிக்கிய 7 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேரின் சக்கரத்தில் விரிசல் ஏற்பட்டதால் சக்கரம் உடைந்து தேர் சாய்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner