எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்ட விரோதமாக லட்சக்கணக்கான சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்த

ஈஷா மய்யத்தில் இந்து மதக் கடவுளான சிவன் சிலையைத் திறக்க வரலாமா?

‘‘மதச்சார்பின்மையைப் புதைக்கும் பிரதமர் மோடியே திரும்பிப் போ! திரும்பிப் போ!!''

கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கழகத் தோழர்கள் கைது

கோவை, பிப்.25 அரசுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான சதுர அடி நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து ஈஷா மய் யத்தை நடத்திவரும் ஜக்கிவாசுதேவின் அழைப்பினை ஏற்று, ஈஷா மய்யத்தில் 112 அடி உயர இந்து மதக் கடவுளான சிவனின் சிலையைத் திறக்க நேற்று (24.2.2017) கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து திராவிடர் கழகம் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவர்களைக் கைது செய்து இரவுவரை வைத்திருந்து, விடுதலை செய்தது காவல்துறை.

அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார் பின்மைக்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் விரோதமாக ஈஷா மய்யத்தில் இந்துக் கடவுளின் சிலையைத் திறக்க கோவை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24.2.2017 வெள்ளி மாலை 4 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடை பெற்றது. ஊர்வலமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று கண்டன முழக்க மிட்டனர்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். கோவை மண்டல தலைவர் நீலமலை கருணாகரன், கோவை மண்டல செயலாளர் ம.சந்திரசேகர், அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், கோவை மாவட்டத் தலைவர் ச.சிற்றரசு, மாவட்டச் செயலாளர் தி.க.செந்தில்நாதன், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர் அரங்க. வெள்ளியங்கிரி, நீலமலை மாவட்டத் தலைவர் மு.நாகேந்திரன், ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், ஈரோடு மாவட்டச் செயலாளர் கு.சிற்றரசு, திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, பழனி மாவட் டத் தலைவர் இரணியன், மாவட்டச் செயலாளர் நா.நல்லதம்பி, தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் நா.சக்திவேல், கோபி மாவட்டத் தலைவர் இரா.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம், மாநில இளைஞரணி இணை செயலாளர் தே.காமராஜ் (ஈரோடு), மாநில மாணரவணி துணை செயலாளர் ஆ.பிரபாகரன், கோவை மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் தர்மசீலன், இரவி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை ஏற்றனர்.

ஆர்ப்பரித்து, பிரதமர் மோடிக்கு எதிராக ஒலி முழக்கமிட்டு, கைதான கழகத் தோழர்கள்:

நீலமலை மாவட்டம்

ஒன்றிய அமைப்பாளர் பிரேம்குமார்.

மேட்டுப்பாளையம் மாவட்டம்

பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன், மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், நகர செயலாளர் சந்திரன் பகுத்தறிவாளர் கழகம், வீரமணி, ரங்கசாமி.

கோபி மாவட்டம்

பெ.ராஜமாணிக்கம் ப.க., கா.மு.பூபதிநாதன் பொதுக்குழு உறுப்பினர், எழில் ராமலிங்கம் மாவட்ட அமைப்பாளர், அ.பாலன் பவானி ஒன்றிய செயலாளர், வெற்றிவேல் நம்பியூர் இளைஞரணி, க.யோகானந்தம் பொதுக்குழு உறுப்பினர்.

ஈரோடு மாவட்டம்

சத்தியமூர்த்தி சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர், சிவகிரி சண்முகம்.

தாராபுரம் மாவட்டம்

காஞ்சிமலையான் உடுமலை நகர தலைவர், தம்பி.பிரபாகரன் (வழக்குரைஞரணி), க.அர்ச்சுனன் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர், கு.முருகானந்தம் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர், கி.மயில்சாமி மாவட்ட அமைப்பாளர்.

பழனி மாவட்டம்

சு.அழகர்சாமி பழனி நகர தலைவர், சி.ராதாகிருஷ்ணன் மாவட்ட அமைப்பாளர், செ.மெ.மதிவதனி மாவட்ட மாணவரணி செயலாளர், செ.மெ.காவியா மாணவரணி

கோவை மாவட்டம்

தி.பரசிவம் பொதுக்குழு உறுப்பினர், சிங்கை.ஆறுமுகம் பொதுக்குழு உறுப்பினர், பழ.அன்பரசு பொதுக்குழு உறுப்பினர், ச.திலகமணி பொதுக்குழு உறுப்பினர், மு.தமிழ்ச்செல்வம் மாவட்ட அமைப்பாளர், ப.மோகன் மாநகர தலைவர், கணபதி காமராஜ், க.வீரமணி தலைமைக் கழகப் பேச்சாளர், வெற்றிச்செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர், பெயின்டர் குமார், தையலர் ராமு, செ.ஜோதிமணி, தி.க. செல்வம், இரா.பிரபு வேலாண்டிபாளையம், புலியகுளம் தர்மலிங்கம், வடக்குப் பகுதி செயலாளர் கவி.கிருட்டிணன், இ.கண்ணன், த.தமிழ்முரசு, வேத.தமிழ்முரசு, இரா.விவேக், மே.பா.ரங்கசாமி, தலைவர் பழனிசாமி (தி.மு.க.), செ.சுரேசு, சு.ஆனந்தசாமி, க.வீரமலை பொள்ளாச்சி நகர செயலாளர், கிருஷ்ணகுமார், ச.மாதவன்.

திருப்பூர் மாவட்டம்

இல.பாலகிருஷ்ணன் மாநகர தலைவர், கோபி.குமாரராசா ப.க. மாவட்டத் தலைவர், இரா.பன்னீர்செல்வம் மாவட்ட இளைஞரணி தலைவர், நாத்திக சாக்ரட்டீஸ் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், துரைமுருகன் மாவட்ட அமைப்பாளர், குரு.விஜயகாந்த் தி.க., மணிவண்ணன் பகுத்தறிவாளர் கழக செயலாளர்.

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்களை 4.20 மணியளவில் காவல்துறையினர் கைது செய்து கோவை சிவானந்தா காலனி, காமராஜர் கலையரங்கில் சிறை வைத்தனர்.

கறுப்புக் கொடி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே

வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே

அவமதிப்பு அவமதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு

ஆபத்து ஆபத்து

மதச்சார்பின்மைக்கு ஆபத்து

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக

மதச்சார்பின்மைக்கு எதிராக

கடவுள் சிலையை திறக்கும்

பிரதமர் மோடிக்கு எதிராக

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்

கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மதச்சார்பின்மையை

குழிதோண்டிப் புதைக்கும்

பிரதமர் மோடியே

திரும்பிப் போ, திரும்பிப் போ!

நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக

ஈஷாவில் சிலை அமைத்தது

சட்ட விரோதம் சட்ட விரோதம்

சட்ட விரோதமாக அமைத்த

கடவுள் சிலையைத் திறக்கும்

பிரதமர் மோடிக்கு எதிராக

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மீறலாமா? மீறலாமா?

நீதிமன்றத் தீர்ப்பை

பிரதமர் மீறலாமா?

மோடியே மீறலாமா?

ஆபத்து ஆபத்து

மதச்சார்பின்மைக்கு ஆபத்து

என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

 

 


 

 

யார் இந்த ஜக்கி வாசுதேவ்?

பண்ணைவிவசாயம்என்றபெயரில் பதிவு செய்யப்பட்டநிலத்தில்கட்டடங்களைக் கட்டியவர்.

தன்னுடைய பகுதிக்கு அருகில் அனைத்து குடியிருப்புகளையும் மிரட்டி தனது பெயருக்கு மாற்றி அவர்களை விரட்டிவிட்டவர்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிகளையும் மீறி அனைத்துக் கட்டடங்களையும் கட்டியவர்.

ஊரமைப்புத் துறை கட்டடம் கட்டுவதை நிறுத்தி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்குமாறு கூறி பல ஆணைகளை வழங்கியும் அதைப் பொருட்படுத்தாமல் கட்டடம் கட்டியவர்.

தற்போது மோடி வந்து திறந்துள்ள தலை அளவு 112 அடியில் சிவனின் சிலை உள்ள இடம், அதனைச் சுற்றியுள்ள 12,000 சதுர அடி நிலங்கள் எல்லாம் வனத்துறைக்கும், தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கும் சொந்தமான இடம். மேலும் இதில் ஒரு பகுதி பழங்குடியினர் குடியிருப்பு இருந்த பகுதி; ஆனால் இதுபற்றி எந்த ஒரு கவலையுமில்லாமல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சட்ட விரோதமாக - மதச்சார்பின்மைக்கு விரோதமாகசிவனின்சிலையைத்திறந்து வைத்து, மேலும் மேலும் நீவீர் தங்குத் தடையின்றி அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்று சமிக்ஞை கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரம்பகுதியில் தற்போது 140 ஏக்கர் நிலப்பகுதியை வேலி யிட்டு அடைத்துவிட்டார். இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானதாகும். இவற்றை எல்லாம் கண்டித்தே கழக ஆர்ப்பாட்டம்!

இந்த ஜக்கிவாசுதேவ்மீது மனைவியைக் கொன்ற வழக்கும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner