எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை,பிப். 25 ஈஷா யோகா மய்ய நிறுவனர் ஜக்கி வாசு தேவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை வழங் கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மய்யம் 1992 ஆம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்டது. இந்தநிறுவனம்சட்டவிரோத மாக நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக்கட்டிவருவ தாக தொடர்ந்து குற்றாச்சாட்டு கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜக்கி வாசு தேவுக்கு 2017ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுவழங்கப்படுவதாகஅறி விக்கப்பட்டது. இந்த அறி விப்பை ரத்துச் செய்யக் கோரிவழக்குரைஞர்வெற்றிச் செல்வன் சென்னை உயர்நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் ஈஷா யோகா மய்யம் தொடர்ந்துசட்டங்களைமீறி கட்டடங்களைக் கட்டிவரு கிறது.இதனால்காடுகள்அழிக் கப்படுவதாகவும்,வன விலங்குகள் பாதிக்கப்படுவதாக வும்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவ தாகவும் கூறப்பட்டுள்ளது.

பிப்.2 ஆம் தேதி கடிதம்

எனவே, தொடர்ந்து சட்ட விரோதமாக கட்டடங்களைக் கட்டி வரும் ஜக்கி வாசுதேவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கக் கூடாது. விருது வழங்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு பிப்.2 ஆம் தேதி கடிதம் எழுதினேன். அந்த கடித்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

எனவே, எனது மனுவை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு வெள்ளியன்று (பிப். 24) தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாணசுந்தரம் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போதுநீதிபதி,மனு கொடுத்த இரண்டு வாரங்களுக்குள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்றார்.

அரசுக்கு நடவடிக்கை எடுக்க குறைந்தபட்சம் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கூறி எந்தவித உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கினை நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner