எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விவசாய நாடான இந்தியா- பால் பொருள்களை இறக்குமதி செய்யும் அவலம்!

கந்தகார், பிப்.26 தொழில்நுட் பங்கள், பன்னாட்டு வணிக வாய்ப்புகள் பெருகிவரும் நிலையில் ஆளும் பாஜகவால் ஏற்பட்டஆபத்தாக பால், பால்பொருள்களை இறக்கு மதிசெய்யவேண்டியஅவல நிலையில் இந்தியா தள்ளப் படுகிறது என்று புள்ளி விவ ரத்தகவல்கள் கூறுகின்றன.

வெண்மைப்புரட்சி இந்தியா வில் குறைந்துவருகிறது. அதிக அளவில் பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து பெர்சி யன் வகை காளைகளின் விந் தணுக்கள் இந்தியாவுக்கு இறக் குமதி செய்யப்பட்டன.

இந்தியாவில் கால்நடை களுக்குத் தேவையான புல் வெளிகள் எங்கிருக்கின்றன என்று கேள்வி கேட்கும் நிலை யில் கால்நடை வளர்ப்புத் தொழில் குறிப்பாக பசு மாடு வளர்ப்புத் தொழில் நசிவ டைந்துவிட்டது. ஆளும் பாஜக அரசு இந்துத்துவாத் திணிப்பு நோக்கில் பசுவதை தடைச்சட்டம் என்கிற பெயரால், மாட்டிறைச்சித்தடை என்கிற பெயரால்இத்தொழிலில்ஈடு பட்டுவருபவர்களை ஒடுக்கி வருவதே இத்தொழில் நலி வடைவதற்கான காரணமாக உள்ளது.

சுதேசிக்கொள்கைஎன்று கூறிவரும்பாஜக Ôமேக் இன் இந்தியாÕஎன்றெல்லாம்கூறிக் கொண்டு, உள்நாட்டு தொழில் களை நசுக்கிவிட்டு, பன்னாட்டு வணிக நிறுவனங்கள்,பண முதலைகளுடன்  கைகோர்த்துக்கொண்டு உழைக்கும்மக்களை,சிறு குறுதொழில்களை,விவசா யத் தொழில்களை முடக்கி வருகிறது.

வகுப்புவாதக் கண்ணோட் டத்துடன் மதச் சிறுபான்மை மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களையும் அச்சுறுத்துவது, தாக்குவது,கொல்வதுஎன்றெல் லாம் இந்துத்துவா வன்முறை களைக் கட்டவிழ்த்து விடுகின்ற நிலையே தொடர்கதையாகி வருகிறது.

பாஜக ஆட்சிப்பொறுப் பேற்ற 4 ஆண்டுகளில் பால் உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான கால்நடைகளுக்குத் தேவையான புல்வெளிகள் பரப்பளவில் பெருமளவில் குறைந்துவிட்டன. அத னால் பால் உற்பத்தியும் சரி வடைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் பால் உற்பத்திக் குறைந்து, பற்றாக்குறை ஏற் படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெர்சியன் பசுக்கள்

ஹோல்ஸ்டெயின் பெர்சி யன் இனப்பசுக்கள் அதிக அளவில்பால்தரக்கூடிய  பசுக்கள் ஆகும். இவ்வகை இன காளை மாடுகளுடன் இணைத்து கலப்பினப் பசுக் களை உருவாக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து அந்த இனத்தைச்சேர்ந்த காளைகளின் விந்தணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டு இறக்குமதி செய் யப்பட்டன.

299 மில்லியன் கால்நடை களுக்குத்தேவையானதீவன உற்பத்தியைஅதிகரிக்காவிட் டால்,இன்னும்நான்கு ஆண்டு களில் பால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டு வருகிறது.

நாடுமுழுவதும்விவசாய நிலப்பகுதிகள் சுருங்கிவரு கின்றன. அதனால் கால்நடை களுக்குத் தேவையான பசும் புல்வெளிகள் இல்லாமல் போகின்றன.

210 மில்லியன் டன்

பால் தேவைப்படும்

அதிகரித்துவரும் மக்கள் தொகையில்,வருவாயும் கூடு தலாகஇருக்கவேண்டியநிலை யில்,தங்களுக்குரிய உணவு முறைகளை மாற்றி வருகி றார்கள். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பால் மற்றும் பால் பொருள்கள் தேவை அதிகரித்து 210 மில்லி யன் டன் பால் தேவைப்படும்.

அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 36 விழுக்காட்டளவில் பால் மற்றும் பால்பொருள்களின் தேவை அதிகரிக்கும் என்று அரசு திட்டமதிப்பீடுகளே குறிப்பிடுகின்றன.

இந்த கூடுதல் தேவைகளை ஈடுகட்ட வேண்டுமானால், ஆண்டுதோறும் 5.5 விழுக்காட்டளவில் பால் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் என்று இந்திய வாழ்வாதார நிலை (ஜிலீமீ ஷிtணீtமீ ஷீயீ மிஸீபீவீணீ’s லிவீஸ்மீறீவீலீஷீஷீபீ-ஷிளிமிலி) எனும் அரசின் புள்ளி விவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா ஸ்பெண்ட் அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரத் தகவல்களின்படி, 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டுமானால், 1,764 மில்லியன் டன் அளவில் கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரத்தின்படி, 900 மில்லியன் டன் அளவிலேயே தீவன உற்பத்தி இருக்கும் என்றும், 49 விழுக்காடு பற்றாக்குறை ஏற்படும் என்கிற நிலையே உள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தனியார் நுகர்வு என்பது ஆண்டுக்கு 5 விழுக்காடு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு முடிய உள்ள கால கட்டத்தில் தனியார் பால், பால்பொருள்கள் நுகர்வு 8.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் அறிக்கை குறிப்பிடுகிறது.

பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் தீவனத்துக்கான புல்வெளிகள்

2005 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 59 விழுக்காடாக 92 மில்லியன் டன்னிலிருந்து 146 மில்லியன் டன்னாக 2015 ஆம் ஆண்டில் அதிகரித்தது. ஆனால், தீவனப் பற்றாக்குறையால் அந்நிலையில் சரிவு ஏற்படுகிறது.

பன்னாட்டளவிலான முன்னணி பால் உற்பத்தி தர வரிசையில்  இடம் பெற்றிருந்த இந்தியா (பன்னாட்டு பால் உற்பத்தி அளவில் 17 விழுக்காடு இந்தியாவில் பால் உற்பத்தி இருந்தது) தற்போது அந்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாலின் தரம்

பன்னாட்டளவி¢ல் உள்ள கால்நடைகளின் பால் உற்பத்தித்திறனில் சரிபாதி அளவில் 48 விழுக்காட்டளவை இந்தியா கொண்டுள்ளது. பன்னாட்டளவில் சராசரி பால் திறன் (லிணீநீtணீtவீஷீஸீ) 2,038 கிலோ அளவில் உள்ள நிலையில் இந்தியாவில் கிடைக்கின்ற பால் திறனாக 987 கிலோவாக (லிணீநீtணீtவீஷீஸீ) இருக்கிறது.

பால் உற்பத்தி அளவு மற்றும் தரம் என்பதில் கிடைக்கின்ற தீவனத்தின் அளவு மற்றும் தரத்தைப்பொருத்தே, பால் உற்பத்தி அளவு மற்றும் தரம் இருக்கும்.

2015ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 3 மாநிலங்களான ராஜஸ்தான் பால் திறன் அளவில் 704 கிராம், அரியானா 877 கிராம், பஞ்சாப் 1,032கிராம் அளவில் உள்ளன. குறிப்பிடத்தகுந்த அளவில்  இம்மாநிலங்களில் 10 விழுக்காடு நிலத்தில் கால்நடைகளின் தீவனம் பயிரிடப்படுகிறது. தேசிய அளவில் 337 கிராம் பால் திறன் உள்ளது.

இந்தியாவில் தற்சமயம் பசுந்தீவனம் 63 விழுக்காடாகவும், உலர் தீவனம் 24 விழுக்காடாகவும், செறிவான தீவனங்கள் 76 விழுக்காடாகவும் கிடைக்கிறது.

தீவன சாகுபடியில்  நிலம் 4%  மட்டுமே

நாடுமுழுவதும் உள்ள நிலத்தில் வெறும் 4 விழுக்காட்டளவில் உள்ள நிலத்தில் மட்டுமே கால்நடைகளுக்கான தீவனம் பயிரிடப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தீவனப்பயிர் சாகுபடிகளில் மிகப்பெரிய அளவில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

பால் தேவைக்கேற்ப கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடி இரட்டிப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளதாக 2016ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றக்குழுவின்சார்பில் விவசாயம் குறித்து அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஞ்சி பகுதியில் பால்பண்ணைத் தொழில் செய்துவரும் சுதிர் மிஸ்ரா என்பவர் கூறும்போது, “கால்நடைகளின் தீவனத்தின் தரம் என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து கால்நடைகளுக்கான தீவனத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

ஆனால், புல்வெளிகளாக இருந்த நிலங்கள் பெரும்பகுதி தீவன சாகுபடி அளவில் குறைந்துவிட்டது அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என்று நாடாளுமன்றக்குழு அறிக்கை கூறுகிறது.

சாகுபடியாகும் நெற்பயிரிலிருந்து பெறப்படும்  வைக்கோல்தான் முக்கிய தீவனமாக இருந்து வந்துள்ளது. விவசாய நிலப்பகுதி அதிகரித்திட வேண்டிய கட்டாயம் உள்ளது. பழைமையான முறையில் தானியங்கள் பயிரிடும் முறையிலிருந்து இயந்திர முறை அறுவடையாக மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி, தானியங்களிலிருந்து பெறப்படுகின்ற கால்நடைகளுக்கான தீவனப்பொருள்களுக்கு மாற்று தேவைப்படுகிறது.

விவசாயத்துக்கான நாடாளுமன்றக்குழு அறிக்கை

உணவுப்பயிர் மற்றும் வணிகப்பயிர் சாகுபடிக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகின்ற நிலையில், தீவனப்புல் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தீவன சாகுபடி குறிப்பிடும் அளவில் அதிக அளவில் செய்ய வேண்டும் என்று விவசாயத்துக்கான நாடாளுமன்றக்குழு அறிக்கை கூறுகிறது.

இந்தியா இறக்குமதி

பன்னாட்டுச் சந்தையில்

விலை உயரும் ஆபத்து

இந்தியா பால் உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த அளவில் உற்பத்தியைப் பெருக்கவில்லை என்றால், பன்னாட்டுச்சந்தையிலிருந்து பால், பால்பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். பன்னாட்டளவில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோரைக்கொண்டுள்ள இந்தியா இறக்குமதி செய்தால், இப்போது பன்னாட்டளவில் திடீர் விலை உயர்வு ஏற்படவும் சாத்தியங்கள் உள்ளன என்று 2015ஆம் ஆண்டுக்கான இந்திய வாழ்வாதாரநிலை (ஜிலீமீ ஷிtணீtமீ ஷீயீ மிஸீபீவீணீ’s லிவீஸ்மீறீவீலீஷீஷீபீ-ஷிளிமிலி) அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner